2009-இல் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம், முதலில் சமூக சேவை மையமாக செயல்பட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தலைமையிலான கூட்டணியை ஆதரித்து, அக்கட்சியின் அமைப்பு வலிமையைப் பெற்றது. ஆனால் உண்மையான தேர்தல் சோதனை 2021 உள்ளூர் உடனடி தேர்தல்களில் வந்தது. சுயேட்சையாக 169 தொகுதிகளில் போட்டியிட்டு, 115 இடங்களில் வெற்றி பெற்றது.
இது விஜயின் ரசிகர்களின் வாக்குச் சக்தியை நிரூபித்தது மட்டுமின்றி, த.வெ.க-வின் எதிர்காலத் தேர்தல் உத்திகளுக்கு அடித்தளமிட்டது. இந்த வெற்றி, கிராமப்புற மற்றும் இளைஞர் வாக்காளர்களிடம் விஜயின் ஈர்க்கத்தை வெளிப்படுத்தியது, அது தற்போது த.வெ.க-வின் தேர்தல் இயந்திரத்தின் முதன்மை ஆகாரமாக உருவெடுத்துள்ளது.

2024 பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட த.வெ.க, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், ஆதரவும் அளிக்காமல் இருக்கும் என விஜய் தெளிவாக அறிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னோட்டமாகக் கொண்டு தமிழக வெற்றி கழகம் தீவிரமாக களமாடி வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு பொதுச் சின்னம் கேட்டு தமிழக வெற்றிக்கழகம் விண்ணப்பித்து இருந்த நிலையில் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
இதையும் படிங்க: வரைவு வாக்காளர் பட்டியல்... பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் தகவல்...!
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதைப் போல தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கான பொதுச் சின்னம் வழங்கும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பாமகவுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல... தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மீது அன்புமணி புகார்...!