வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

முதலமைச்சரின் வருகைக்காக மாணவர்களின் தேர்வுகளை ஒத்தி வைப்பதா என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.புனரமைக்கப்பட்ட புதுக்கோட்டை பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் வருகிறார் என்பதற்காக மாணவிகளின் தேர்வுகளை ஒத்திவைப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக வேல்முருகன் தெரிவித்தார்.

பல மாதங்களாக வகுப்பறைகளில் படித்து, தேர்வுக்காகத் திட்டமிட்டு தயாராகி வந்த மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளை ஒரு அரசு நிகழ்ச்சிக்காகத் தடை செய்வது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார். மாணவர்களின் எதிர்காலத்தை விட முதலமைச்சரின் வருகை முக்கியமானதா என்றும், பேருந்து நிலையத் திறப்பு விழா மாணவர்களின் எதிர்காலத்தை விட முக்கியமானதா என்றும் அவர் கேட்டார். அரசு நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்வது அரசின் பொறுப்பு என்றும், அதற்காக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் தேர்வுகளையும் பாதிப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாணவர்களின் கல்வி தொடர்பான முடிவுகள் வாய்மொழி உத்தரவுகளால் நடத்தப்படுமா என்றும், தேர்வுகளை ஒத்திவைக்க அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்பட்டதா என்றும், யார் உத்தரவின் அடிப்படையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளும் உடனடியாக வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கோரினார்.முதலமைச்சர் வருகை என்பது அரசின் நிகழ்ச்சி என்றாலும், மாணவர்களின் கல்வி என்பது அவர்களின் வாழ்நாள் எதிர்காலம் என்று சுட்டிக்காட்டிய வேல்முருகன், அரசின் நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களின் கல்வியைப் பாழக்கும் நிலை உருவாகக் கூடாது என்று எச்சரித்தார். பேருந்து நிலையத்தைத் திறப்பதற்காக அரசு விழா நடத்தலாம், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யலாம் என்றாலும், அதற்காக மாணவர்களின் தேர்வை ஒத்திவைப்பது என்றால் அரசு விழாவை நடத்துவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தையே ஒத்திவைப்பதாகிவிடும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

இனிவரும் காலங்களில் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிக்காகவும் மாணவர்களின் தேர்வுகள், வகுப்புகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் அரசு உறுதியான நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எனவே புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட தேதியிலேயே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: “நான் அடிச்சா தாங்க மாட்ட…” – சி.எம்-ஐ டேரக்ட்டாக வம்பிழுத்த மேயர் பிரியா… திமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी