மதுரை பாரப்பத்தியில் தமிழக வெற்றி கழகத்தினுடைய இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டு திடலுக்கு நேற்று இரவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று இரவு முதலே ஏராளமான இளைஞர்கள் மாநாட்டு திடலிலேயே உறங்கினர்.
இதனிடையே, இன்று காலை மாநாட்டு திடலில் ஆங்காங்கே மது பாட்டில்கள் சிதறி கிடக்கக்கூடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. தவெக தனது இரண்டாவது மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிடும் போதே, தொண்டர்களுக்கு என சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. அதில் குறிப்பாக மாநாட்டிற்கு வரும் போதோ அல்லது செல்லும் போதோ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் மது அருந்தக்கூடாது என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மாநாட்டு திடலில் தங்கிய சில நபர்கள் மது குடித்ததோடு, அந்த மதுபாட்டில்களையும் அங்கங்கே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். தொடர்ச்சியாகவே தலைமை அவ்வளவு அறிவுறுத்தியும் திடலுக்கு வந்து நேற்று இரவு அங்கேயே உறங்கியவர்கள் மது குடுத்துவிட்டு, அந்த பாட்டிலை ஆங்காங்கே தூக்கி எறிந்திருக்கிற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிகாலை முதலே குவியும் தொண்டர்கள்... தவெக மாநாட்டில் திடீர் மாற்றம்... பிளானை மாற்றிய விஜய்...!
அதேபோல் இன்று காலை மாநாட்டு திடலுக்கு வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதியில் விஜய் உடைய பேனருக்கு அடியில் நின்று இளைஞர்கள் சிலர் மது அருந்தும் காட்சிகள் வெளியாகின. எக்காரணம் கொண்டும் மாநாட்டிற்கு வரும் நபர்கள் மது அருந்தக்கூடாது, மதுவை எடுத்து வரக்கூடாது என தலைமை ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டிருந்தும். அதனை காற்றில் பறக்கவிட்டுள்ள தொண்டர்களால் தலைமைக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக மாநாட்டில் இரவோடு, இரவாக நடந்த அதிரடி மாற்றம்... கதறப்போகும் திமுக, அதிமுக...!