பவானியில் குட்கா உடன் கையும் களவுமாக பிடிபட்ட தவெக நிர்வாகியை காவல் நிலைய பினையில் விடுவித்த போலீசார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டன் கணக்கில் குட்கா கடத்திய வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரணமாக 1½ kg குட்கா வைத்திருந்தாலே கைது செய்து சிறையில் அடைக்கும் போலீசார் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்பதன் ஒரு காரணத்திற்காகவே காவல் நிலைய பிணையில் விடுவித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று முன்தினம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கார்களில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்ததாக பவானி, டானா சாவடி சந்து பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக பவானி நகர செயற்குழு உறுப்பினர் அருண் (40), மற்றும் விஐபி நகர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (46) ஆகிய இருவரை கைது செய்த பவானி போலீசார் அவர்களிடமிருந்து எட்டு கிலோ குட்கா பொருட்கள், மூன்று கார்கள், ரொக்கம் 25 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!
தொடர்ந்து இருவரையும் இரவோடு இரவாக காவல் நிலைய பிணையில் விடுவித்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் பெரும் குட்கா வியாபாரிகளாக இருந்து வருகின்றனர். இருவர் மீதும் ஏற்கனவே குட்கா வழக்குகள் உள்ளது.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பவானி நகர செயற்குழு உறுப்பினராக உள்ள அருண் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒன்றை டன் குட்கா கடத்தி வந்து கைது செய்யப்பட்டார். குறிப்பாக இவர் குடோன் அமைத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா விற்பனை செய்ததன் காரணமாக குண்டர் சட்டமும் பாய்ந்தது.
ரத்தினகுமாரும் தமிழக வெற்றி கழகத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் மீதும் ஏற்கனவே குட்கா விற்பனை தொடர்பாக பவானி காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருந்துறையில் 110 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது, அதில் கைது செய்யப்பட்ட நபர் அருணிடம் இருந்து குட்காவை வாங்கி வந்ததாக தெரிவித்ததன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வெறும் ஒன்ற கிலோ குட்கா வைத்திருந்தாலே கைது செய்து சிறைக்கு அனுப்பும் போலீசார்.
டன் கணக்கில் குட்கா கடத்தி குடோன் அமைத்து விற்பனை செய்தவர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட நபர், தற்போது குட்காவுடன் பிடிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்ற ஒரே காரணத்திற்காக போலீசார் அருண் மற்றும் அவர் உடன் கைது செய்யப்பட்ட ரத்தினகுமார் ஆகிய இருவரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.
அருண் மற்றும் ரத்தினகுமாரிடமிருந்து மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதில் வெறும் எட்டு கிலோ குட்கா மட்டும்தான் இருந்ததா என பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!