வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

“யாரை பார்த்து அணில்-ன்னு சொன்ன” – மதுரை மாநாட்டில் சீமானை சிதறவிட்ட தவெக தொண்டர்கள்…!

அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை என்றும் விமர்சித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த புதிதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயை அன்புடன் தம்பி என்று தான் அழைத்து வந்தார். ஆனால் விக்கிரவாண்டி மாநாடு முடிந்ததில் இருந்தே மிரண்டு போன சீமான், தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பட்டாளம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவி வருவதே சீமானின் இந்த கோபத்திற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சீமான் நேரடியாக விமர்சித்திருந்தார். தவெகவின் கொள்கை என்னவென்று கேட்டால் ‘தளபதி’ என கோஷமிடுவதாக சீமான் சாடியுள்ளார். நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற  நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அவங்ககிட்ட ‘என்னடா உங்க கொள்கை’னு கேட்டா, ‘தளபதி… தளபதி’னு சொல்றாங்க, எனக்கு ‘தலைவிதி… தலைவிதி’னு கேக்குது.

‘சரி எதுக்குடா வந்தீங்க’னு கேட்டா, ‘TVK, TVK’னு கத்துறாங்க, எனக்கு ‘டீ விற்க, டீ விற்க’னு கேக்குது. புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை என்றும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: சீமான் ஒழிக.. மதுரை மாநாட்டில் தொண்டர்கள் கோஷம்! பாரபத்தியில் பரபரப்பு..!

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று மதுரையில் நடக்கவுள்ள தவெக மாநாட்டிற்காக குவிந்துள்ள  தொண்டர்கள் ‘சீமான் ஒழிக’, ‘சீமான் ஒழிக’ என கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியின் மாநாடு… மரங்களை கட்டி அணைத்து முத்தமிட்ட சீமான்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी