தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டர் ஒருவர் காவலர் கையை கடித்த விவகாரத்தில்,5 பேர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகில் புதிதாக திறக்கப்பட்ட சொகுசு மதுபான கூடத்தைஅகற்றக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நுழைவாயில் கயிறு கட்டி பாதுகாப்பில் இருந்த காவல் துறையினரை மீறி, உள்ளே நுழைந்து திடீரென மதுபானக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
அப்போது அங்கு வந்து காவல்துறையினர் தகரத்தின் மீது ஏறிய தவெக தொண்டரை கீழே இறக்கினர். அப்பொழுது திடீரென தவெக தொண்டர் ஜெமினி காவலரின் கை கடித்தார். ஜாம்பி போல காவலரின் கையை தவெக தொண்டர் கடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இதையும் படிங்க: “தவெக ஒரு அரசியல் கட்சியே இல்ல” - சைலண்ட் மோடில் இருக்கும் விஜயை வம்பிழுக்கும் ஐ.பெரியசாமி...!
இந்த சம்பவம் தொடர்பாக ஜெமினியை பாலக்கோடு காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், ஜெமினி, ஜெயபிரகாஷ், கணேசன், கிருஷ்ணன், வினோத்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை பாலக்கோடு காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சசிகலா குறித்து எதிர்பாராமல் வந்த கேள்வி.. சட்டென எழுந்து நடையைக் கட்டிய செங்கோட்டையன்... பிரஸ்மீட்டில் பரபரப்பு...!