தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், மார்ச் 30 முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்கினர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்கள் சுமார் 2.77 கோடியும், பெண்கள் சுமார் 2.89 கோடியும் அடங்குவர். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12.51 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.

இந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்புமனு பரிசீலனையில் தவெக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 44 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: நெல்லையில் விஜய் சூறாவளி பிரச்சாரம்..! முன்னேற்பாடுகள் மும்முரம்..! பொதுச் செயலாளர் ஆனந்த் பேட்டி..!!
உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞர் அளித்த சான்றிதழ்களை ஏற்க கூடாது என அதிமுகவினர் அளித்த புகாரை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. 5 மணிக்குள் விளக்கம் அளிக்க கே.ஏ.செங்கோட்டையனுக்கு தேர்தல் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் வி்.பி.பிரபு, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிப்படை அறிவு கூட திமுக வழக்கறிஞர்களுக்கு இல்லை..! ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு..!