தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி அறிவித்த இந்தத் திட்டத்தின்படி, மார்ச் 30ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், ஏப்ரல் 7ஆம் தேதி பரிசீலனை, ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனு வாபஸ் ஆகியவை நடைபெற்றன.
வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த ஒரே கட்டத் தேர்தல் நடைபெறுவதால், மாநிலம் முழுவதும் தேர்தல் பரபரப்பு உச்சத்தில் உள்ளது. தற்போது ஆளும் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் புதிய அரசியல் சக்திகள் இடையே மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் நடிகர் திருப்பி அரசியல்வாதியான விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் முதன்முறையாக முழு அளவில் களமிறங்கியுள்ளது. மார்ச் 29ஆம் தேதி வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலின்படி, விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இது அவரது முதல் சட்டமன்றத் தேர்தல் அனுபவமாக அமையும்.
இதையும் படிங்க: முதல்ல பூஸ்ட் டப்பா... இப்ப பீர் பாட்டிலா?... சந்தி சிரிக்கும் தவெக வேட்பாளரின் மாற்று அரசியல்...!
திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. சார்பில் விஜய் போட்டியிட, தி.மு.க. சார்பில் இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க. சார்பில் க. ராஜசேகரன் உள்ளிட்டோர் எதிர்கொள்கின்றனர். இதனிடையே திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அங்கீகாரம் இல்ல..! வில்லிவாக்கம் வேட்பாளர் முன்னிலையில் திமுகவுக்கு தாவிய TVK சப்போட்டர்ஸ்.!