தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மார்ச் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி நடைபெற்ற நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் தவெகவிடம் இல்லை. தவெகவால் ஆட்சியமைக்க முடியுமா அப்படி ஆட்சியமைத்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா எனும் குழப்பம் நீடித்து வருகிறது.
விஜய் நேற்று பனையூர் முகாம் அலுவலகத்தில் நேற்று 106 எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்தார். அப்போது படு உற்சாகத்துடன் இருந்த விஜய், பெரும்பான்மை பற்றி எம்.எல்.ஏ.க்களுக்கு சந்தேகம் இருந்த போதும் பெரும் நம்பிக்கையோடு இருக்கிறார். 'நாம் அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைப்போம். கவலையே வேண்டாம்' என உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்கிறார்' எனக்கூறியிருக்கிறார்.
அப்படியானால் முக்கிய கட்சியுடன் விஜய் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது. அப்படியானால் அதிமுகவுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனிடையே இன்று ஆளுநர் அர்லேக்கரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். வெளியூர் எம்.எல்.ஏக்களை மகாபலிபுரத்திலுள்ள தனியார் ரெசார்ட்டில் தங்கியிருக்குமாறு தவெக தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: இது தேவையா?... லயோலா மணி தடுத்தும் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு செய்த பகீர் காரியம்... அதிர்ச்சியில் தவெக...!
இந்த சந்திப்பின் போது தேர்தலுக்கு முன்பிருந்த அதே நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் விஜய் இருந்திருக்கிறார். மக்கள் நம்மை மாற்றமாக பார்க்கிறார்கள். நம் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீங்கள் தைரியமாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்யுங்கள் அப்போது கூறியவர், இந்த முறையும் நாம் தான் ஆட்சி அமைப்போம் என ஆணித்தரமாக பேசியிருப்பது கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்ட்ராங்காக செல்கிறது என்பதையே குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!