தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இது மிகவும் முக்கியமான காலகட்டம் என்றும் ஏதாவது அழுத்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்றும் கேட்டுள்ளார். அழுத்தத்திற்கு அடங்கிப் போகும் ஆளா நான் என்று கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டை இதற்கு முன் ஆண்டவர்களும் பாஜகவிற்கு அடிமையாக தான் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தற்போது ஆள்பவர்களும் பாஜகவிற்கு அடிமையாக தான் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். முன்பு ஆண்டவர்கள் நேரடியாக அடிமையானார்கள்., ஆனால் தற்போது ஆள்பவர்கள் மறைமுகமாக அடிமையாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

நமக்காக உழைப்பவர்கள் யாராவது வந்து விட மாட்டார்களா என்று மக்கள் அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்தார். மாற்றி மாற்றி ஓட்டு போட்டு ஏமாந்த மக்கள் நம்மை நம்புவதாக தெரிவித்தார். நம்மை நம்புபவர்களுக்காக நாம் நன்றியோடு இருக்க வேண்டும் அல்லவா என்று கேட்டார். அதனால்தான் மிக மிக முக்கியமான காலகட்டம் என்று கூறினேன் என்று தெரிவித்தார். மக்கள் நமக்கே நமக்காக ஒரு இடத்தை, என் கரியரின் உச்சத்தை கொடுத்திருப்பதாக தெரிவித்தார். மக்கள் உள் அன்போடு அள்ளி அரவணைப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: இதுவா டா தமிழ்நாடு... திருமாவை அடியாளாக பயன்படுத்தும் திமுக..! விளாசிய ஆதவ் அர்ஜுனா..!
அரசியலுக்கு வந்ததற்கு பிறகும் சரி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகும் சரி ஊழல் செய்யவே மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஒரு பைசா தொட மாட்டேன்., அது எனக்கு அவசியமே கிடையாது என்று கூறினார். என்ன சூழ்ச்சி செய்தாலும் என்ன அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போவதோ அல்லது அண்டிப் பிழைப்பதோ அல்லது அடிமையாக இருப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். மண்ணுக்கும் மக்களுக்கும் யார் தீங்கு செய்தாலும் மக்களை பாதுகாப்பதற்காக வந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலக அளவில் விசில் ட்ரெண்ட்..! தவறு நடந்தால் தவெக குரல் ஒலிக்கும்..! அருண் ராஜ் உறுதி..!