பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டம் தைலாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கூட்டணி முடிவு, கட்சி பூசல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் அன்புமணி இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் ராமதாஸின் அழைப்பை ஏராளமானோர் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமகவில் சுமார் 90 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை ஏழு பேர் மட்டுமே தைலாபுரத்திற்கு வருகை புரிந்துள்ளனர். 5 எம்எல்ஏக்களில் இரண்டு பேர் மட்டுமே வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகே மணி மற்றும் அருள் ஆகியோர் மட்டுமே வருகை புரிந்துள்ளனர்.
இதையும் படிங்க: அது அடிமைத்தனத்தை தகர்த்தெறியக் கூடிய சொல்... அன்புமணிக்கு திருமாவளவன் பதிலடி!!

அன்புமணியின் ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், பாமகவில் அன்புமணியின் கை ஓங்குவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான நிர்வாகிகள் ராமதாஸின் நடவடிக்கையில் அதிருப்தியை வெளிப்படுத்தி இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை கூடுகிறது பாமக அவசர ஆலோசனைக் கூட்டம்.. மா.செ.களுக்கு ராமதாஸ் அழைப்பு!