தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15ம் தேதி கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களுக்கு அரசு சேவைகளை வீடுவீடாக கொண்டு சேர்க்கும் முன்னோடி திட்டமாகும். இத்திட்டம், 15 துறைகளை உள்ளடக்கி, கிராமப்புறங்களில் 46 சேவைகளையும், நகர்ப்புறங்களில் 43 சேவைகளையும் வழங்குகிறது. பட்டா மாறுதல், ரேஷன் அட்டை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, சிறு-குறு வணிக கடன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மக்கள் தங்கள் வீட்டருகே பெற முடியும்.

முதல் கட்டமாக, 10,000 முகாம்கள் மூலம் மக்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒரு லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு முகாம்களின் விவரங்களை விளக்கி, தேவையான ஆவணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 45 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை டூ டெல்லி.. நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் வெற்றிகரமாக புறப்பட்டது..!!
இத்திட்டம், டிஜிட்டல் அறிவு அல்லது இணைய வசதி இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மூன்று கட்டங்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்த நான்காம் கட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் சுயமரியாதையை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உதவும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (26.08.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-12ல் சாத்தாங்காடு நெடுஞ்சாலையில் உள்ள தூய பவுல் மகாஜன மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-53ல் வால்டாக்ஸ் சாலை, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக்கூடம், திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6),
வார்டு-68ல் பெரியார் நகரில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-90ல் 100 அடி சாலை, அவுஸ்திரேலியா எக்ஸ்டென்ஷன், கிரிஸ்டல் பேலஸ் எண் 1961சி, கே.எம். ராயல் மஹால், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-96ல் வில்லிவாக்கம், பரசுராம ஈஸ்வர கோயில் தெருவில் உள்ள வெற்றி மஹால், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-119ல், இராயப்பேட்டை, பேகம் சாஹிப் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக்கூடம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10)
வார்டு-133ல் தியாகராயநகர், சோமசுந்தரம் தெருவில் உள்ள சோமசுந்தரம் மைதானம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-155ல், ராமாபுரம், ராயலா நகர் பிரதான சாலையில் உள்ள வள்ளி வடிவேலன் திருமண மண்டபம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-176ல் வேளச்சேரி 100அடி சாலையில் உள்ள முருகன் திருமண மண்டபம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-182ல் கந்தன் சாவடி, சி.பி.ஐ. காலனி, 2வது பிரதான சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாயக்கூடம் ஆகிய 10 வார்டுகளில் நடைபெற உள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: செவியை கிழித்த இடி, மின்னல்.. சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை!! வானிலை அப்டேட்!!