வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

MLA அமுல் கந்தசாமி மறைவு..! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவையடுத்து வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த அமுல் கந்தசாமி வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். சிறுவயது முதலே அதிமுகவில் இருந்து வந்த அவர், ஒருமுறை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும், ஒருமுறை மாவட்ட கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சுபநிதி என்ற மகளும் இருக்கின்றனர்.

சொந்த தொகுதியில் போட்டியிடாமல் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டாலும், சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் ஆறுமுகத்தை வீழ்த்தி வெற்றிபெற்றவர் அமுல் கந்தசாமி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக முதல் வெற்றியை பதிவு செய்த எம்எல்ஏ அமுல் கந்தசாமி தான். இந்த நிலையில், வால்பாறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நல குறைவால் உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில் வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ளது.

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी