தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 20ம் தேதி சென்னையின் பெரம்பூர் தொகுதியில் மீண்டும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். இது அவரது பெரம்பூர் தொகுதி பிரசாரத்தின் இரண்டாவது கட்டமாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே பெரம்பூரில் தனது வேட்புமனு தாக்கல் செய்து, முதல் கட்ட பிரசாரத்தை மேற்கொண்ட விஜய், இப்போது மீண்டும் அங்கு களமிறங்கி வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான அனுமதியைப் பெறுவதில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பூர் தொகுதி, வட சென்னையின் முக்கிய பகுதியாகும். திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.வை எதிர்த்து விஜய் போட்டியிடும் இந்தத் தொகுதியில், அவரது தொண்டர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் கட்ட பிரசாரத்தின்போது பெரம்பூரில் பெரும் மக்கள் திரளை ஈர்த்த விஜய், இம்முறை மேலும் வலுவான பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளார்.

கட்சியின் சார்பில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: "அண்ணா வாண்ணா"... நாளை ஒன்றல்ல, இரண்டு சம்பவம் தயார்... களத்திற்கு வருவாரா விஜய்?
பெரம்பூர் பிரசாரத்துடன் இணைத்து, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் விஜய் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளார். சென்னை முழுவதும் உள்ள முக்கிய தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அனுமதி பெறும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால், பிரசார அட்டவணை விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல்..!! திருப்பூரில் விஜய் பரப்புரைக்கு நாளை அனுமதி..!