தமிழகத்தை காக்க வந்த தலைவா., முதலில் உங்களுடன் இருப்பவர்களிடமிருந்து உங்களை காப்பாற்ற வேண்டும் என தாடி பாலாஜி பதிவிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நடிகர் தாடி பாலாஜியின் பதிவால் புதிய சர்ச்சை உருவாகி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு முடிந்த மறுநாளே விஜயை காப்பாற்ற வேண்டும் என்ற அவரது பதிவு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிக்கு நண்பன் என்ற வாசகத்துடன் whatsapp- ல் அவர் வைத்த ஸ்டேட்டஸ் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இது தொடர்பாக தாடி பாலாஜி கூறிய கருத்தில், முதல் மாநாட்டை விட இரண்டாவது மாநாட்டில் விஜயின் பேச்சில் தொய்வு காணப்பட்டதாக தெரிவித்தார். மிகவும் தவறாக முதல் மாநாட்டில் பேசி இருந்ததாகவும் தனிப்பட்ட முறையில் இரண்டாவது மாநாட்டின் பேச்சு தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறினார்.

அஜித் கொலை, கவின் படுகொலை உள்ளிட்டவை குறித்து விஜய் பேசி இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். விஜயை நேரடியாக சந்தித்து பேச முடியவில்லை என்று கூறிய தாடி பாலாஜி, தற்போது விஜயிடம் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #MR.PM.. தாமரையில தண்ணீரே ஒட்டாது., தமிழக மக்கள் ஒட்டுவாங்களா? பிரதமரை பந்தாடிய விஜய்..!
மீண்டும் மீண்டும் கச்சத்தீவு பற்றியும் நீட் பற்றியும் பேசுவதற்கு பதில் வழக்கு தொடர்ந்து இருக்கலாம் என்றும் மீண்டும் மீண்டும் திமுகவைப் பற்றிய பேசுவதாகவும், ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு பற்றி பேசி இருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பினார். ஆள்பவர்கள் இதை செய்யவில்லை நாங்கள் இவற்றை செய்யப் போகிறோம் என்று பேசியிருக்க வேண்டும் என்றும் விஜயை பார்த்து விட்டோம் கிளம்புகிறோம் என்று பலர் கிளம்பி விட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: பாசிச பாஜகவும், பாய்சன் திமுகவும் தான் எதிரி... மதுரை மாநாட்டில் விஜயின் தரமான செய்கை