மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதனை கொலை வழக்காக பதிவு செய்து ஐந்து காவலர்களை கைது செய்துள்ளனர். மிருகத்தனமான தாக்குதலில் அஜித்குமார் உயிரிழந்தவராகவும், கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார் என்றும் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது. அஜித் குமார் முரளி காயம் இல்லாத இடங்களே இல்லை என்றும் 50 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
காவலர்கள் கைது செய்யப்பட்டது வெறும் கண் துடைப்பு தான் என்று கூறிய நீதிமன்றம் மேலும் அஜித்குமார் கொலை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் வழக்கை சிபிஐக்கு மாற்றியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முத்து குமாரின் தம்பிக்கு அரசு வேலை வழங்கி விட்டீர்கள் அவரது தாயாருக்கு என்ன நிவாரணம் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதனிடையே, காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், 24 காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஏற்கனவே, பாஜக மற்றும் அதிமுக உள்ள கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேறு இடத்திலும் அல்லது வேறு தேதியிலோ மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவசர வழக்காக எடுத்துக்கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காவல் நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சந்திக்க இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!
இதையும் படிங்க: "லாக் அப் டெத்" ...விளைவு மோசமா இருக்கும்! முதல்வர் ஸ்டாலின் வார்னிங்!