கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்பட்டார். ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோரை சந்தித்ததால் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனின் கட்சிப் பதவியை பறித்தார்.
இருப்பினும், அதிமுகவை நிச்சயம் ஒருங்கிணைப்பேன் என செங்கோட்டையன் கூறிவந்த நிலையில் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தமிழ்நாட்டு அரசியலில் ஆழம் மற்றும் அகலத்தை நன்கு அறிந்தவர் என்று மாற்றுக் கட்சியினராலேயே போற்றப்பட்டவர் செங்கோட்டையன்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படைத்தளபதியாக பார்க்கப்பட்ட செங்கோட்டையன் இனி விஜயின் தளபதி இன்று ஆகிவிட்டார். அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்த தேர்தலிலேயே எம்எல்ஏ ஆனவர் செங்கோட்டையன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் முக்கிய முகமாக செங்கோட்டையன் பார்க்கப்பட்டவர். அதிமுக ஒருங்கிணைப்புக்காக பாடுபட போவதாக அறிவித்ததை தொடர்ந்து கட்சி பதவியை பறிகொடுத்தார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா...!! இது நம்ப லிஸ்டுலேயே இல்லையே... செங்கோட்டையனுக்கு விஜய் கொடுத்த முக்கிய டாஸ்க்... திமுக, அதிமுக செம்ம ஷாக்...!
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படைத்தளபதியான செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார். பனையூர் அலுவலகத்தில் விஜயை சந்தித்து தன்னை தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைத்துக் கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த உடனேயே செங்கோட்டையனுக்கு விஜய் பொறுப்புகளை அள்ளி வழங்கியுள்ளார். அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: விஜய் தலைமையேற்ற எம்.ஜி.ஆர். விசுவாசி... தவெக.காரரான செங்கோட்டையன்...!