தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் மாலை நேரத்தில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஜனவரி மாதத்தில் பொதுவாக பனிப்பொழிவு அதிகமாக ஏற்படும் நிலையில் திடீரென காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகக் கடற்கரையை நோக்கி வரக்கூடும் என்பதால், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வங்கக் கடலின் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் வடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: புத்தாண்டை வரவேற்ற மழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்...!
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கு கடலை நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உஷார் மக்களே..! உதற போகுது... நீலகிரி, கொடைக்கானலுக்கு உறைபனி எச்சரிக்கை...!