வேலூரில் புதியதாக கட்டப்பட்ட நூலகம், உடற்பயிற்சி கூடம், பேருந்து நிழற்குடைகளை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருக பெண் ஒருவர் விழுந்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
36.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் மற்றும் தாராப்படவேடு என அருகருகே உள்ள இரண்டு இரட்டை ஏரிகளை புனரமைத்து சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட்ட ஏரிகளை பொது மக்கள் பயன்பாட்டுக்கு காட்பாடி சட்டமன்ற, உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அர்ப்பணித்து, 20.90 கோடி மதிப்பீட்டில் காட்பாடி நகரில் 3 வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் 50 லட்சம் மதிப்பீட்டில் கழிஞ்சூர் ஏரியின் உபரி நீர் கால்வாயில் தரைபாலம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ஏரியை சுற்றிப்பார்த்தார். இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, வேலூர் வடக்கு மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதி பிரம்மபுரம் மற்றும் அரும்பருத்தி ஆகிய பகுதிகளில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியிலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மேடையில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி மற்றும் எம்.பி. கதிர் ஆனந்த் உடன் துரைமுருகன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மேடைக்கு வந்த பெண் ஒருவர் அமைச்சர் துரைமுருகன் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறிய அழ ஆரம்பித்தார். உடனே அங்கிருந்து கட்சி நிர்வாகிகள் அப்பெண்ணை சமாதானப்படுத்தி, காலில் விழுவதை தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிங்க: விஜய் மனிதாபிமானமிக்கவர்!! எங்களுக்கு மனிதாபிமானமில்லையா? கொந்தளிக்கும் துரைமுருகன்!
அப்போது அப்பெண்மணிக்கு என்ன பிரச்சனை என்பதை மக்களவை கதிர் ஆனந்த் கேட்டறிந்தார். அதற்கு அவர் தனது மாற்றுத்திறனாளி மகனின் கல்விக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
அதனைக் கேட்ட துரைமுருகனும், கதிர் ஆனந்தும் கட்டாயம் உதவி புரிவதாகக் கூறி, அப்பெண்ணின் முகவரியை கேட்டுத் தெரிந்து கொண்டனர். இச்சம்பவத்தால் விழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அடம் பிடிக்கும் துரைமுருகன்!! மணல் குவாரிகள் திறப்பு முடக்கம்: சமரச முயற்சியில் அதிகாரிகள்!!