ஊசிமலை காட்சி முனைக்கு வந்த இளைஞர் செல்பி எடுக்கும்போது கால் தவறி 150 அடி பள்ளத்தில் விழுந்தார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ராணுவ மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவக்குழுவினர் உயிருடன் அவரை மீட்டனர் தற்பொழுது மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் .
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அமைந்துள்ளது ஊசிமலை காட்சி முனை இங்கு உள் மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும் இந்த காட்சி முனையை இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிவகுருநாதன் (28) திருப்போரூர் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த இவர் கடந்த மூன்று நாட்களாக உதகையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார் இவர் மூன்று நாட்களாக அந்தப் பகுதியில் உள்ள டூரிஸ்ட் டாக்ஸியை வாடகைக்கு எடுத்து உதகையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று இருக்கிறார் .
நேற்று காலை மீண்டும் வாடகை கார் மூலம் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள ஊசிமலை காட்சி முனைக்கு வந்துள்ளார். தன்னுடைய நண்பர்கள் வருவதாக கூறி அவர் வந்த வாகனத்தை மீண்டும் ஊட்டிக்கு அனுப்பியுள்ளார் சுமார் மதியம் 3.30 மணி அளவில் டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுனருக்கு அலைபேசி மூலம் இவர் தொடர்பு கொண்டு ஊசிமலை காட்சி முனையில் செல்பி எடுக்கும் போது வழுக்கி விழுந்து பாறையின் இடுக்கில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .
உடனடியாக அந்த டூரிஸ்ட் டாக்ஸி வாகன ஓட்டுநர் நடுவட்டம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு ஊசிமலை காட்சி முனையில் ஒருவர் சிக்கி இருப்பதாக தெரிவித்தார் உடனடியாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு வந்து பார்த்த விட்டு தர்மல் ட்ரோன் கேமரா மூலம் கண்டறியப்பட்டு சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்திருப்பது தெரியவந்தது.
உடனடியாக கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் இவரை தேடும் பணியில் ஈடுபட்டு பாறையின் இடுக்கில் இவர் சிக்கிக் கொண்டதை பார்த்துள்ளனர் .
மேலும் அவர் நெட்டுக்குத்தலான ஒரு பாறையில் சிக்கி இருப்பதை பார்த்து அவரை மீட்கும் பணியானது துவங்கப்பட்டது ஆனால் இரவு நேரம் என்பதால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது மேலும் அவருக்கு முதலுதவி அளிப்பதற்கும் வழியில்லாத சூழ்நிலையும் இருந்து வந்தது வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இருந்து அவருக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு அவர் இடுப்பு பகுதியில் பலமாக அடிபட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு மீட்பதற்கு சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்த நிலையில் உடனடியாக வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து ராணுவ மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர் மேலும் முதலாவதாக ராணுவ குழுவினர் 150 அடி பள்ளத்தில் இறங்கி அவரை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்பு ராணுவ மருத்துவர் மேஜர் கவிதா அவர்கள் பாறையின் இடுக்கில் இருந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் .
இதன்பின்பு ராணுவத்தினர் ஸ்ட்ரச்சர் மூலம் கயிறு கட்டி காவல்துறையினர் வனத்துறையினர் இணைந்து பத்திரமாக 150 அடிப் பள்ளத்தில் விழுந்திருந்த இளைஞரை 12 மணி நேரம் போராடி உயிருடன் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர் .
உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார மேலும் அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் .