2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த டாஸ்-க்கு பின் பேசிய குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், நாங்கள் முதலில் பந்து வீசப் போகின்றோம். ஆடுகளம் பெரிய அளவு மாறாது என்று நினைக்கின்றேன். முதலில் எந்த இலக்கை நாங்கள் எட்ட போகிறோம் எனத் தெரிந்து கொண்டு அதன் பிறகு அதனை ஷேஸ் செய்வது நல்லது என்று நினைக்கின்றேன்.

நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அணியாக செயல்பட முயற்சி செய்கின்றோம். எங்கள் அணியில் இன்று வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அர்ஷத் கான் களமிறங்குகிறார். ரபடா எங்களுடன் தான் பயிற்சி செய்து வருகிறார். எனினும் அவருக்கு சில நாள் பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டிய நிலை இருக்கின்றார். சாய் கிசோர் சோறு போன்ற வீரர் எங்கள் அணியில் இருப்பது அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றேன். எங்கள் அணியில் ஆறு முதல் ஏழு பௌலிங் ஆப்ஷன்கள் எங்களுக்கு இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மழையால் தப்பித்த DC... ஏமாற்றத்தில் SRH; இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!!

அவரை தொடர்ந்து பேசிய மும்பை அணி கேடன் ஹர்திக் பாண்டியா, நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய கவலைப்படவில்லை. மும்பையில் இன்று வழக்கத்திற்கு மாறாக காற்று அதிகமாக வீசுகிறது. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசுவது நல்ல முடிவாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். திட்டத்தை சரியான முறையில் களத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

ஐபிஎல் தொடரில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் களத்திற்கு வந்து ஆட்டத்தை மாற்ற முடியும். திட்டத்தை நாம் தொடர்ந்து பாலோ செய்ய வேண்டும். 20 ஓவர்கள் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும். அடக்கமாகவும் ஒழுக்கத்துவங்களும் கவனத்துடன் தொடர்ந்து செயல்படுவது முக்கியம். நாங்கள் எங்கள் அணியின் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எங்களுக்கு இந்த தொடரில் சிறந்த போட்டி அமையவில்லை.. வேதனையை வெளிப்படுத்திய கம்மின்ஸ்!!