2003 ம் ஆண்டு நிக்லாஸ் ஜென்ஸ்ட்ராம் என்னும் டெவலப்ரால் முதன் முதலில் ஸ்கைப் செயலி வெளியிடப்பட்டது. இந்த செயலியில் வீடியோ வழி உரையாடல்கள், வீடியோ கான்ஃபரன்சிங், வாய்ஸ் கால்ஸ் போன்ற வசதிகள் இருந்தன. மேலும், கூடுதல் வசதிகளாக பயனர்கள் ஸ்கைப் தளத்திலேயே இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஃபைல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பல சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்கள் உடனான வீடியோ கான்ஃபரன்சிங் மீட்டிங்கிற்கு ஸ்கைப் தளத்தையே பயன்படுத்தினர்.

கணினி, மொபைல் போன்களிலும் ஸ்கைப்பை பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டதால், 2005ம் ஆண்டில் ஸ்கைப் பயனர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை எட்டியது. 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பை 8.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. அதன் பிறகு மைக்ரோசாப்ட் தனது சேவைகளுடன் ஸ்கைப் தளத்தின் சேவைகளையும் சேர்த்து வழங்கியது. இதனிடையே கொரானா காலக்கட்டத்தில் ஜூம் செயலி வளர்ச்சி பெற்றது.
இதையும் படிங்க: 7000mAh பேட்டரி.. OLED டிஸ்ப்ளே.. 120W சார்ஜிங்.. iQOO களமிறக்கும் OG மொபைல்.. விலை எவ்வளவு?

வீடியோ கான்ஃபரன்சிங், ஆன்லைன் மீட்டிங் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு ஜூம் செயலியை பயனர்கள் பயன்படுத்தினர். ஜூம் செயலி, கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளை பயனர்கள் பெரிதும் பயன்படுத்தியதால் ஸ்கைப் தளத்திற்கான பயனர்கள் எண்ணிக்கை குறைந்தது. 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்கைப், இணையத்தில் இலவச குரல் அழைப்புகளை வழங்குவதன் மூலம் விரைவாக பிரபலமடைந்தது, 2005 ஆம் ஆண்டளவில் 50 மில்லியன் பயனர்களை ஈர்த்தது. அதே ஆண்டு, eBay அந்த தளத்தை $2.6 பில்லியனுக்கு வாங்கியது, ஆனால் அதன் சுற்றுச்சூழல் அமைப்பில் அதை திறம்பட ஒருங்கிணைக்க போராடியது.

2009 ஆம் ஆண்டில், சில்வர் லேக் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு, ஆண்ட்ரீசென் ஹொரோவிட்ஸுடன் சேர்ந்து, ஸ்கைப்பைக் கட்டுப்படுத்தியது. இறுதியில், 2011 ஆம் ஆண்டில், கூகிள் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப போட்டியாளர்களை ஏலத்தில் எடுத்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை $8.5 பில்லியனுக்கு கையகப்படுத்தியது. இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் தளத்தின் சேவைகளை இன்று (மே.5) முதல் நிரந்தரமாக மூடவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, வீடியோ அழைப்பு தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது.
இதையும் படிங்க: சூப்பர் ஜூம்.. 6000mAh பேட்டரி.. 15W வயர்லெஸ் சார்ஜிங்.. கலக்கும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ மொபைல்