• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    செல்லப்பிராணியாக அரிய குரங்கு?! நடிகர் விக்ரம் வீடியோவால் வெடித்த புதிய சர்ச்சை! வனத்துறை விசாரணை!

    லார் கிப்பன் மரங்களில் வாழும் விலங்காக இருப்பதால், அதன் இயற்கையான வாழ்விடத்துக்கு ஏற்ப போதுமான இடவசதி இல்லாமல் வீட்டில் அல்லது கூண்டில் வளர்ப்பது அதன் இயல்பான வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
    Author By Pandian Tue, 11 Aug 2026 12:48:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-vikram-lar-gibbon-video-wildlife-department-investigation

    விக்ரம் வீட்டில் அரிய லார் கிப்பன் குட்டியா? வைரல் வீடியோவால் வனத்துறை விசாரணை!

    சென்னை: அழிவின் விளிம்பில் உள்ளதாக கூறப்படும் அரிய வகை லார் கிப்பன் குரங்கு குட்டியுடன் நடிகர் விக்ரம் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிய வனவிலங்கை வீட்டில் வளர்க்க அனுமதி உள்ளதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

    நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் லார் கிப்பன் குரங்கு குட்டியுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. வீடியோ வேகமாக பரவிய நிலையில், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த குரங்கு குட்டியை வீட்டில் வைத்திருக்க தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் உள்ளனவா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கூட்டம்... ‘மீசைய முறுக்கு 2’ நிகழ்ச்சி திடீர் ரத்து! மன்னிப்பு கேட்டார் ஹிப்ஹாப் ஆதி!

    விசாரணையில் கிடைத்ததாக கூறப்படும் ஆவணங்களின்படி, அந்த லார் கிப்பன் குட்டி முதலில் மணிப்பூரைச் சேர்ந்த லைகுராம் சிங் என்பவரிடம் இருந்ததாக தெரிகிறது. அவரிடம் எட்டு லார் கிப்பன் குட்டிகளை பராமரிப்பதற்கான அனுமதி ஆவணங்கள் இருந்ததாகவும், அவற்றின் பூர்வீக நாடாக மலேசியா குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ChiyaanVikram

    இதில் மூன்று குரங்கு குட்டிகளை ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதனிடம் லைகுராம் சிங் வழங்கியதாகவும், அவற்றில் ஒரு குட்டியே தற்போது விக்ரம் வீட்டில் பராமரிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்த பரிமாற்றங்கள் மற்றும் அனுமதி தொடர்பான சட்டப்பூர்வ நிலை குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடர்கிறது.

    இதற்கிடையே, சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது.

    லார் கிப்பன் மரங்களில் வாழும் விலங்காக இருப்பதால், அதன் இயற்கையான வாழ்விடத்துக்கு ஏற்ப போதுமான இடவசதி இல்லாமல் வீட்டில் அல்லது கூண்டில் வளர்ப்பது அதன் இயல்பான வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை தனிநபர்கள் வைத்திருப்பது தொடர்பாக சட்ட விதிமுறைகள் உள்ளதால், உரிய அனுமதி இல்லாமல் பராமரிக்கப்பட்டதா என்பதும் விசாரணையில் முக்கிய அம்சமாகியுள்ளது.

    இதுபோன்ற அரிய விலங்குகள் வேறு யாரிடமும் உள்ளனவா, அவற்றின் பரிமாற்றத்தில் விதிமீறல்கள் நடந்துள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அரிய வனவிலங்குகளை சட்டவிரோதமாக கடத்துதல் அல்லது இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் குழுக்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விவகாரத்தில் விசாரணை முடிந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்போதுதான், லார் கிப்பன் குட்டி நடிகர் விக்ரம் வசம் எவ்வாறு வந்தது மற்றும் அதற்கான அனுமதிகள் முறையாக இருந்தனவா என்பது தெளிவாகும்.

    இதையும் படிங்க: 10 தேசிய விருதுகளை அள்ளிய கோலிவுட்! தமிழ் திரையுலகின் வெற்றிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!

    மேலும் படிங்க
    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு
    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    அரசியல்
    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    இந்தியா
    சினிமா நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் அரசு பதவி..!! CM விஜய்யின் நண்பர்களுக்கு அடுத்தடுத்து பொறுப்புகள்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    சினிமா நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் அரசு பதவி..!! CM விஜய்யின் நண்பர்களுக்கு அடுத்தடுத்து பொறுப்புகள்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    சினிமா

    செய்திகள்

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு
    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    அரசியல்
    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    இந்தியா
    தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share