தெலுங்கு படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தி பிரியா. 1987 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வந்த எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் செண்பகம். இந்தப் படத்தில் இடம் பெற்ற செண்பகமே செண்பகமே என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றது.

இதையும் படிங்க: குட்டி தொப்பை எட்டி பார்க்கும் டைட் உடையில்... மடோனா செபாஸ்டியன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒன்று எங்கள் ஜாதியே, நேரம் நல்லா இருக்கு, சக்கரை பந்தல், சிகப்பு தாலி, இரயிலுக்கு நேரமாச்சு, பூவிழி ராஜா, ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகை பானுப்ரியாவின் சகோதரி என்பது பலரும் அறிந்த உண்மை.

இந்த நிலையில் தான் சாந்தி பிரியா மொட்டை அடித்துக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க பிஸீயான நடிகையாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறையவே சீரியல்கள் பக்கம் கவனம் செலுத்தினார்.

எனினும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது 1992 பாலிவுட் நடிகர் சித்தார்த் ராயை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலித்து 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த சாந்தி பிரியா அதன் பிறகு முற்றிலும் சினிமாவிலிருந்து விலகி கணவரோடு மும்பையில் செட்டிலானார்.

இதையடுத்து 2 ஆண்கள் குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில் தான் திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கணவர் இறந்த பிறகு மகன்களோடு தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் கணவர் இறந்து 21 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது மொட்டை அடித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தான் சாந்தி பிரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில், தனது தனிமை வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் என்னுடைய அம்மாவிற்கு நான் காதலித்தது பிடிக்கவில்லை. பாலிவுட்டில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் போது இப்போது கல்யாணம் தேவையில்லை என்று அம்மா சொன்னார்கள். ஆனால், நான் கேட்கவே இல்லை. திருமணம் செய்து கொண்டு குடும்பம் என்று கமிட்டாகிவிட்டேன். அதனால் சினிமாவிலிருந்து விலகினேன். அம்மா சென்னைக்கு வர சொல்றாங்க, ஆனால் என்னால் அவர் வாழ்ந்த இடத்தை விட்டு வர முடியவில்லை.
இதையும் படிங்க: நோர்வே திரைப்பட விழாவில் கலைமகன் விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா!