நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் 'அப்பா' என்ற ஒரே வார்த்தையில் அனைவரது உள்ளத்தையும் கரைய வைத்து "கண்ணானே கண்ணே உன் மீது சாயவா" என்ற பாடலின் மூலம் கோடான கோடி ரசிகர்களின் இருதயங்களை கவர்ந்த நடிகை தான், நடிகை அனிகா சுரேந்திரன். அந்த அளவிற்கு குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அனிகா, 2010ம் ஆண்டு 'கதை துடாருன்னு' என்ற படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமானார். பின் நடிகர் அஜித்தின் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் அவருக்கு மகளாகவும், இதனை அடுத்து 2019ல் வெளியான 'விஸ்வாசம்' திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாகவும் நடித்து புகழ் பெற்றார்.

இதனை தொடர்ந்து, ஹீரோயினாக களம் இறங்கி இருக்கும் அனிகா 2023ம் ஆண்டு மலையாளத் திரைப்படமான 'புட்ட பொம்மா' மூலம் திரையுலகில் முன்னணி நடிகையானார். இப்படி ஹீரோயினாக வளம் வரும் அனிகா, கேரளாவின் மஞ்சேரியில் உள்ள நாசரேத் பள்ளியிலும், கோழிக்கோட்டில் உள்ள தேவகிரி சிஎம்ஐ பொதுப் பள்ளியிலும் கல்வி பயின்றார். பின்பு, கொச்சியில் உள்ள 'சேக்ரட் ஹார்ட் கல்லூரியில்' படித்து வருகிறார்.
இதையும் படிங்க: இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. கதையின் நாயகனாக யோகி பாபு!

கதை துடருன்னு, நான்கு நண்பர்கள், இனம், பவுட்டியுடே நாமத்தில்,5 சுந்தரிகல், நீலகாஷம் பச்சைக்கடல் சிவப்பு பூமி, நயனா, ஒன்னும் மின்டாதே, என்னை அறிந்தால், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடிதான், மிருதன், பெரிய தந்தை, ஜானி ஜானி ஆமாம் அப்பா, விஸ்வாசம், மாமனிதன், தி கோஸ்ட், புட்ட பொம்மா, ஓ மை டார்லிங், அன்புடன் உங்கள் வேதா, கோதாவின் ராஜா, பி.டி. சார், கோப்பை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் .

மேலும் குறும்படங்களாக இதுவரை, அமராந்த், வாழ்க்கையின் வண்ணங்கள், மா, கார்த்தி கல்யாணி போன்ற படங்களிலும், ஐயப்ப திந்தகா, இருக்கை புரட்சி, என் காதலா, ஃப்ளோரியோ, ஓர்மதன் எடனாழியில் போன்ற இசை வீடியோக்களில் நடித்து இருக்கிறார்.

தன வாழ்க்கையில் குழந்தை நட்சித்தரமாக இருந்து இன்றுவரை உழைப்பால் உயர்ந்து இருக்கும் நடிகை அனிகா சுரேந்திரன், 2023ம் ஆண்டு சிறந்த குழந்தைக் கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளையும்,2011,2018ம் ஆண்டு சிறந்த குழந்தைக் கலைஞருக்கான ஆசியாநெட் திரைப்பட விருதுகள், 2020ம் ஆண்டு சிறந்த குழந்தைக் கலைஞருக்கான JFW திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

இப்படி இருக்க அவரது அசத்தும் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: காதல் கணவருடன் இறுக்கி அணைத்தபடி நடிகையின் க்யூட் கிளிக்..! ஒரே சிரிப்புதான் மொத்த நியூயார்க்கும் குளோஸ்..!