• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தொழிலாக இருந்தாலும்.. உறவாக இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும்..!! டாக்ஸிக் விழாவில் மனம் திறந்த நடிகர் யாஷ்..!

    நடிகர் யாஷ் டாக்ஸிக் விழாவில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
    Author By Bala Mon, 10 Aug 2026 12:03:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-i-will-not-do-anything-against-my-conscience-says-actor-yash-tamilcinema

    ‘கே.ஜி.எஃப்’ திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் கன்னட நடிகர் யாஷ். ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அவர், தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார்.

    யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், ‘டாக்ஸிக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய யாஷ், திரைப்படத்தைப் பற்றி மட்டுமின்றி தனது வாழ்க்கை, உறவுகள் மற்றும் தான் கடைப்பிடிக்கும் கொள்கைகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, “தொழில் என்றாலும் சரி, உறவு என்றாலும் சரி நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்துக்கு கிடைத்த அங்கிகாரம்..!! அதிரடியாக பாராட்டி பதிவிட்ட நடிகர் சூர்யா..!

    யாஷின் சினிமா பயணத்தில் ‘கே.ஜி.எஃப்’ திரைப்படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான அந்தப் படங்களின் வெற்றி, யாஷை கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் என்ற நிலையிலிருந்து இந்திய அளவில் அறியப்படும் நட்சத்திரமாக உயர்த்தியது. இதன் பின்னர் யாஷ் தேர்வு செய்யும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களால் அதிக எதிர்பார்ப்புடன் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    வழக்கமான கேங்ஸ்டர் கதைகளில் இருந்து மாறுபட்ட பின்னணியில் படம் உருவாகியிருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் கதை 1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த ஆக்‌ஷன் திரில்லர் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    actor-yash

    காலகட்ட பின்னணி, கேங்ஸ்டர் உலகம், அதிகாரம், குற்றம் மற்றும் உறவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் படத்தின் பிரம்மாண்டமான உலகத்தை ரசிகர்களுக்கு ஓரளவு அறிமுகப்படுத்தியுள்ளன. யாஷின் கதாபாத்திரம் எந்த மாதிரியான தன்மையைக் கொண்டது, அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, அவரைச் சுற்றி இருக்கும் கதாபாத்திரங்களுடனான உறவு எவ்வாறு செல்கிறது என்பது குறித்த கேள்விகளுக்கு படம் வெளியாகும்போது முழுமையான பதில் கிடைக்கும்.

    ‘டாக்ஸிக்’ படத்தின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் அதன் நட்சத்திரப் பட்டாளம். நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இதில் இணைந்துள்ளனர். குறிப்பாக, யாஷ் மற்றும் நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளதால், இந்த கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நயன்தாரா திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பொதுவாக கலந்து கொள்வதை தவிர்த்து வரும் நிலையில், ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொண்டதோடு, யாஷ் குறித்தும் படக்குழுவினர் குறித்தும் பேசியிருந்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விழாவில் பேசிய யாஷ் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நெகிழ்ச்சியாக பேசினார். தனது வாழ்க்கையில் அனைத்து வகையிலும் நன்றி சொல்லக்கூடிய ஒரே நபர் தனது மனைவி என்று அவர் குறிப்பிட்டார். “என் வாழ்க்கையில் நான் எல்லா வகையிலும் நன்றி சொல்லக்கூடிய ஒரு நபர் என்றால் அது என் மனைவி மட்டுமே” என்று யாஷ் பேசியதாக கூறப்படுகிறது.

    யாஷின் இந்தப் பேச்சு நிகழ்ச்சியில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஒரு நடிகராக தனது தொழில் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளையும் சவால்களையும் சந்தித்துள்ள அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவியின் ஆதரவு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். யாஷ், நடிகை ராதிகா பண்டிட்டை திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்கும் திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளும் உள்ளனர். யாஷின் சினிமா பயணத்தில் அவரது குடும்பம் தொடர்ந்து முக்கியமான ஆதரவாக இருந்து வருகிறது.

    தன்னைப் பற்றி பேசிய யாஷ், தன்னுடன் நண்பராக இருப்பதும், தன்னுடன் இணைந்து பணிபுரிவதும் மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளார். “ஏனெனில் நான் ஒரு வித்தியாசமான ஆசாமி. இதுதான் உண்மை” என்று அவர் தன்னைப் பற்றியே சுவாரஸ்யமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடன் பணிபுரிவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    actor-yash

    ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி, ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு விஷயங்களில் யாஷ் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ‘கே.ஜி.எஃப்’ படங்களுக்குப் பிறகு தனது திரைப்படத் தேர்வுகள் மற்றும் படைப்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால், தன்னுடன் பணிபுரியும் நபர்களிடம் தான் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதையே இந்த கருத்து வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பார்க்கின்றனர்.

    விழாவில் யாஷ் பேசியதில் மிகவும் கவனத்தை ஈர்த்த பகுதி அவரது நேர்மை குறித்த கருத்துதான். “தொழில் என்றாலும் சரி, உறவு என்றாலும் சரி நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். அதை செய்தாலே கடவுள் நம்முடன் இருப்பார் என்பதை நம்புவன் நான்” என்று அவர் தெரிவித்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையிலும் தனிப்பட்ட உறவுகளிலும் நேர்மையாக இருப்பதையே தான் முக்கியமாக கருதுவதாக யாஷ் இந்தப் பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். சினிமா என்பது போட்டி நிறைந்த துறை. குறிப்பாக இந்திய அளவில் ஒரு நடிகர் பிரபலமடைந்த பிறகு அவரைச் சுற்றி எதிர்பார்ப்புகளும் அழுத்தங்களும் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையிலும், தனது மனசாட்சிக்கு உண்மையாக இருப்பதே முக்கியம் என்ற கொள்கையை யாஷ் முன்வைத்துள்ளார்.

    யாஷின் பேச்சில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த மற்றொரு கருத்து, “மனசாட்சிக்கு விரோதமாக எதையும் நான் செய்யவே மாட்டேன்” என்பதாகும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் தொழில் வெற்றியை விட தனக்குள் இருக்கும் மனநிறைவும் நேர்மையும் முக்கியம் என்பதை இந்த வார்த்தைகள் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘கே.ஜி.எஃப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு யாஷின் அந்தஸ்து மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் நடிக்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் விரிவடைந்துள்ளது. இருப்பினும், தனக்கென சில கொள்கைகளை வைத்திருப்பதாக அவர் கூறியிருப்பது அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    ‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் இறுதிக்கட்ட ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டிரெய்லர் வெளியான பிறகு படத்தின் காட்சியமைப்பு, யாஷின் தோற்றம், ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் நட்சத்திரங்களின் பங்களிப்பு குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். குறிப்பாக ‘கே.ஜி.எஃப்’ படங்களுக்குப் பிறகு யாஷ் நடிக்கும் திரைப்படம் என்பதால், ‘டாக்ஸிக்’ மீது இயல்பாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை படம் எந்த அளவுக்கு பூர்த்தி செய்யும் என்பதுதான் தற்போது அனைவரது கேள்வியாக உள்ளது.

    ஒருபுறம் கேங்ஸ்டர் உலகத்தை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான ஆக்‌ஷன் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பு இருக்க, மறுபுறம் யாஷ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்துள்ளது. இதேபோல் கீது மோகன்தாஸ் போன்ற தனித்துவமான இயக்குநர் இந்தக் கதையை எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தை திரையில் எவ்வாறு உருவாக்கியுள்ளனர் என்பதும் படத்தின் முக்கியமான அம்சமாக இருக்கும். மொத்தத்தில், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்ததோடு, யாஷின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது கொள்கைகள் குறித்தும் ரசிகர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

    actor-yash

    குறிப்பாக, தனது மனைவிக்கு நன்றி தெரிவித்த யாஷ், “தொழில் என்றாலும் சரி, உறவு என்றாலும் சரி நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும்” என்று கூறியிருப்பது அவரது பேச்சில் முக்கியமான செய்தியாக அமைந்துள்ளது. மேலும், “மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டேன்” என்ற அவரது வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளன. இப்போது அனைவரது பார்வையும் வரும் 26-ம் தேதி வெளியாக இருக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மீது திரும்பியுள்ளது. ‘கே.ஜி.எஃப்’ வெற்றிக்குப் பிறகு யாஷின் அடுத்த அத்தியாயம் எப்படி அமையப் போகிறது என்பதற்கான பதிலை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: நான் கிளாமரில் சுத்த காரணம் பணத்துக்கோ.. புகழுக்காகவோ இல்ல..!! ரசிகர்களின் விமர்சனத்துக்கு தர்ஷா குப்தா பதிலடி..!

    மேலும் படிங்க
    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    குற்றம்
    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    இந்தியா
    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    அரசியல்
    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    தமிழ்நாடு
    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    உலகம்

    செய்திகள்

    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    குற்றம்
    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    இந்தியா
    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    அரசியல்
    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை...

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு

    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    தமிழ்நாடு
    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share