• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ‘ஜெயிலர் 2’வில் "டைகர் கா ஹுகும்" சூப்பரா.. இல்ல "ஒன் சன்.. ஒன் மூன்" சூப்பரா..!! அனிருத் மீது நீங்க வைத்திருந்த நம்பிக்கைக்கு பலன் கிடைத்ததா..!

    ஜெயிலர் 2வின் "ஒன் சன்.. ஒன் மூன்" பாடல் டைகர் கா ஹுகும் அளவுக்கு இருக்கிறதா.
    Author By Bala Sat, 26 Sep 2026 13:12:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-jailer-2-second-single-one-sun-one-moon-song-is-good-or-bad-tamilcinema

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மீது ரசிகர்களுக்கு ஏற்கனவே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து உருவாகி வரும் இந்த இரண்டாம் பாகம், ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதல் பாகத்தில் ரஜினிகாந்தின் மாஸ், நெல்சனின் டார்க் காமெடி, அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் என அனைத்தும் சேர்ந்து மிகப்பெரிய திரையரங்கு அனுபவத்தை கொடுத்திருந்தன. குறிப்பாக ‘காவாலா’, ‘ஹுகும்’, ‘ரத்தமாரே’ போன்ற பாடல்கள் திரைப்படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அதிலும் ‘ஹுகும்’ பாடல் ரஜினியின் மாஸ் இமேஜுக்கு ஏற்ற வகையில் அமைந்து ரசிகர்களை திரையரங்குகளில் கொண்டாட வைத்தது.

    இதனால் ‘ஜெயிலர் 2’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எப்படி இருக்கும் என்ற கேள்வி படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இருந்து வந்தது. அதிலும் மீண்டும் நெல்சன் – அனிருத் கூட்டணி இணைந்திருப்பதால், முதல் பாகத்தைவிட இன்னும் பெரிய இசை அனுபவத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், படத்தின் முதல் பாடலாக ‘ஒன் சன் ஒன் மூன்’ வெளியாகியுள்ளது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. சிலர் பாடலின் இசையை ரசித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் முதல் ‘ஜெயிலர்’ படத்தில் கிடைத்த அந்த அதிரடியான மாஸ் உணர்வு இந்த பாடலில் சற்று குறைவாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ப்ளூ ஃபிலிம் எடுத்து.. இப்படி காசு பார்காணுமா..!! ட்ரெக்டரு உனக்கு தைரியம்-யா.. ’பாரடைஸ்’ படத்தை கிழித்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தின் கதைக்களத்துடன் தொடர்புடைய வகையில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ கதை விவரங்கள் பெருமளவில் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. குறிப்பாக தீபாவளி காலகட்டத்தை ஒட்டியுள்ள வெளியீடு என்பதால், திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    jailer-2-second-single

    இதற்கிடையே, ரஜினியின் படத்துடன் போட்டியாக தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்படாமல் தள்ளிப்போயுள்ளது. நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் ‘ஓம்’ வெளியாகலாம் என்ற பேச்சுகள் திரையுலகில் நிலவி வருகின்றன. இதனால் அக்டோபர் 15-ம் தேதி ‘ஜெயிலர் 2’க்கு நேரடியான போட்டி குறைந்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. நெல்சன் மற்றும் அனிருத் கூட்டணி தமிழ் சினிமாவில் தனித்துவமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. நெல்சனின் காட்சியமைப்பு, நகைச்சுவை மற்றும் மாஸ் தருணங்களுக்கு அனிருத்தின் இசை மிகச்சரியாக பொருந்துவது இந்த கூட்டணியின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

    ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட படங்களில் இவர்களின் கூட்டணி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக ‘ஜெயிலர்’ படத்தில் அனிருத்தின் பின்னணி இசை திரைப்படத்தின் மாஸ் தருணங்களை மேலும் உயர்த்தியது. ‘ஹுகும்’ பாடல் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட வரவேற்பு மிகப்பெரியது. ரஜினியின் ஸ்டைலுக்கும், திரையில் அவரது அறிமுகம் மற்றும் மாஸ் காட்சிகளுக்கும் அந்த பாடல் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. இதனால் ‘ஜெயிலர் 2’ படத்திலும் அதே மாதிரியான பாடல்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் வெளியாகியுள்ள ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடல் முதல் கேட்பிலேயே ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது.

    பாடலின் இசை வழக்கமான அனிருத் பாணியில் அதிக சத்தம் மற்றும் எனர்ஜியுடன் அமைந்திருந்தாலும், பாடல் வரிகள் தெளிவாக கேட்கவில்லை என்ற விமர்சனமும் ஒரு தரப்பில் முன்வைக்கப்படுகிறது. பாடலின் முழு அமைப்பும் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. குறிப்பாக நெல்சன் மற்றும் அனிருத் கூட்டணியின் வழக்கமான காமெடி கலந்த புரமோஷன் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமான அணுகுமுறையை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, இந்த பாடல் சற்று வித்தியாசமாக அமைந்திருக்கிறது. ‘இன்டர்நேஷனல் லெவல்’ என்ற எதிர்பார்ப்பில் உருவாக்கப்பட்ட பாடல் என்றாலும், அந்த அளவுக்கு ரசிகர்களை உடனடியாக கவர்ந்ததா என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் பாடல்களை ஒப்பிட்டு பார்க்காமல் ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலை தனியாக கேட்டால், அதில் இசை ரீதியாக பல சுவாரஸ்யமான அம்சங்கள் இருப்பதாக கூறலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால், ரசிகர்கள் இந்த பாடலை தனியாக பார்க்கவில்லை. ‘காவாலா’, ‘ஹுகும்’, ‘ரத்தமாரே’ போன்ற பாடல்கள் இடம்பெற்ற ‘ஜெயிலர்’ ஆல்பத்துடன் ஒப்பிட்டுத்தான் தற்போது ‘ஜெயிலர் 2’ பாடலை கேட்கிறார்கள். அந்த ஒப்பீட்டில் ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடல் முதல் கேட்பிலேயே அதே அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற கருத்து ஒரு தரப்பில் உள்ளது. குறிப்பாக ‘ஹுகும்’ பாடலில் இடம்பெற்ற மாஸ் வரிகள் மற்றும் ரஜினியின் திரை ஆளுமையை உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்ட வரிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

    “டைகர் கா ஹுகும், அலப்பறை கிளப்புறோம்” போன்ற வரிகள் பாடலை ரசிகர்களின் கொண்டாட்டப் பாடலாக மாற்றின. அதேபோன்று ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலில் “இன்னைக்கும் என்னென்னைக்கும் ஒரு தலைவன் தான், பத்திக்கும் எட்டுத்திக்கும் அவன் பேர் சொன்னால்” போன்ற வரிகள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற வரிகள் அந்த அளவுக்கு மனதில் நிற்கவில்லை என்பது சில ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அனிருத் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக உள்ளார். திரைப்பட இசையமைப்புடன் சர்வதேச அளவிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

    jailer-2-second-single

    அதனால் அவர் ஒவ்வொரு பெரிய படத்திற்கும் வழங்கும் இசை மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அவர் இசையமைத்த சில படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ போன்ற மிகப்பெரிய படத்தில் அவரது இசை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. முதல் பாகத்தில் அனிருத் உருவாக்கிய இசை ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியில் முக்கியமான காரணியாக இருந்ததால், இரண்டாம் பாகத்திலும் அதே அளவிலான மேஜிக்கை ரசிகர்கள் எதிர்பார்ப்பது இயல்புதான்.

    ஆனால், முதல் பாடலான ‘ஒன் சன் ஒன் மூன்’ அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துவிட்டது என்று தற்போது கூற முடியாது என்ற கருத்து சமூக வலைதளங்களில் காணப்படுகிறது. ஒரு பாடல் வெளியான உடனேயே மிகப்பெரிய ஹிட் ஆகாமல், திரைப்படம் வெளியான பிறகு ரசிகர்களால் கொண்டாடப்படும் சம்பவங்களும் தமிழ் சினிமாவில் ஏராளம். ஒரு பாடல் திரைப்படத்தில் எந்த இடத்தில் வருகிறது, அந்த காட்சியில் கதாநாயகனின் மாஸ் தருணம் எப்படி அமைக்கப்படுகிறது, பாடலுக்கு முன்பும் பின்பும் வரும் காட்சிகள் என்ன என்பதெல்லாம் ஒரு பாடலின் வரவேற்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலும் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்திற்கு எந்த சூழ்நிலையில் வருகிறது என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

    பாடல் தற்போது சுமார் ரகமாக தெரிந்தாலும், திரையரங்கில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் அந்த பாடல் வேறு ஒரு அனுபவத்தை கொடுக்குமா என்பதுதான் அடுத்த கேள்வி. குறிப்பாக ரஜினிகாந்தின் திரை தோற்றம், நெல்சனின் காட்சியமைப்பு மற்றும் அனிருத்தின் பின்னணி இசை ஆகியவை ஒன்றாக சேரும்போது பாடலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், ‘ஒன் சன் ஒன் மூன்’ மட்டுமே ‘ஜெயிலர் 2’ படத்தின் முழு இசை அனுபவம் கிடையாது என்பதுதான். முதல் பாகத்திலும் அனைத்து பாடல்களும் ஒரே மாதிரியான வரவேற்பை பெறவில்லை. ஆனால் சில பாடல்கள் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்காற்றின.

    அதேபோல் இரண்டாம் பாகத்திலும் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் பாடல்கள் ரசிகர்களை கவரலாம். குறிப்பாக ரஜினிக்கான இன்னொரு மாஸ் பாடல் அல்லது ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடும் வகையிலான பாடல் வெளியாகும் பட்சத்தில், தற்போது எழுந்துள்ள இந்த விமர்சனங்கள் பின்னுக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது. மேலும், அனிருத்தின் உண்மையான பலம் அவரது பின்னணி இசையில்தான் என்பதை அவரது ரசிகர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். ஒரு பாடல் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்றாலும், படத்தின் பின்னணி இசையில் அவர் மீண்டும் தனது முத்திரையை பதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

    ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடல் குறித்து தற்போது கலவையான கருத்துகள் இருந்தாலும், ரஜினி ரசிகர்களின் இறுதி தீர்ப்பு அக்டோபர் 15-ம் தேதிதான் வெளியாகும். ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வரும் இரண்டாம் பாகம் என்பதால், ரசிகர்கள் எதிர்பார்ப்பது சாதாரணமான மாஸ் படத்தை அல்ல. முதல் பாகத்தை விட பெரிய திரை அனுபவத்தைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் ஒரு பாடல் மட்டும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இசை எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது. தற்போதைய நிலையில், ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடல் அனிருத் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு உடனடி மாஸ் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் பாடல் படத்தில் இடம்பெறும் காட்சியின் தாக்கத்தை பொறுத்து அதன் வரவேற்பு மாறலாம்.

    jailer-2-second-single

    முதல் ‘ஜெயிலர்’ படத்தில் ‘ஹுகும்’ போன்ற பாடல் உருவாக்கிய அதிர்வை இரண்டாம் பாகத்திலும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை அனிருத் அடுத்த பாடலில் பூர்த்தி செய்வாரா, அல்லது ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலே ஸ்லோ பாய்சனாக மாறி பின்னர் ஹிட் ஆகுமா என்பதற்கு இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எது எப்படியோ, ரஜினி – நெல்சன் – அனிருத் கூட்டணியின் மீது இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புதான் தற்போது ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலையும் இவ்வளவு தீவிரமாக ரசிகர்கள் விவாதிக்க காரணமாகியுள்ளது. அக்டோபர் 15-ம் தேதி ‘ஜெயிலர் 2’ திரைக்கு வரும்போது, பாடல் மட்டுமின்றி மொத்த படமும் முதல் பாகத்தின் மேஜிக்கை மீண்டும் கொண்டு வருகிறதா என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

    இதையும் படிங்க: எவன் சொன்னா நான் பரோட்டா சூரின்னு..!! நான் சாதாரண சூரி தான் போதுமா.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்..!

    மேலும் படிங்க
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    அரசியல்
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share