சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாசாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகர் தர்ஷன், தற்போது பல்லாரி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை மையமாகக் கொண்டு, தர்ஷனை மறுவேலை பல்லாரி சிறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை, இன்று பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது நிகழ்ந்த ஒரு திடீர் சம்பவம், நீதிமன்ற வளாகத்தையே பரபரப்பாக மாற்றியது.
என்னவெனில், வழக்கின் விசாரணை வழக்கமான முறையில் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், திடீரென்று ஒரு நபர் அத்துமீறி நீதிமன்ற அறைக்குள் நுழைந்தார். அவரிடம் எந்த விதமான அனுமதியும் இல்லாமல் நேரடியாக நீதிபதியின் முன்பு சென்று நின்றார். அவர் தனது கையில் வைத்திருந்த ஒரு காகித மனுவை நீதிபதியிடம் கொடுத்தார். மேலும், மிகவும் உணர்ச்சிவசப்படும் குரலில், "ரேணுகாசாமி கொலைக்கான முக்கிய காரணமாக தர்ஷனே உள்ளார். அவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும்" என்று கூறினார். இதனால் நீதிபதி அதிர்ச்சியடைந்து, "நீங்கள் யார்? உங்கள் மனுவை எதற்காக இங்கு கொண்டுவந்தீர்கள்?" என்று கேட்டபோது, அவர் சற்றும் யோசிக்காமல், "நான் ரவி பெலகெரேவின் ஆதரவாளர். நியாயம் பேச வந்துள்ளேன்" என்று கூறியுள்ளார். இந்த பதிலால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் அமைதியின்மை நிலவியது. இந்த சூழலில் இந்த நபர் நீதிமன்ற வளாகத்தில் எப்படி நுழைந்தார் என்பது குறித்து, நீதிபதி கடும் கேள்விகளை எழுப்பினார். "நீங்கள் கொண்டு வந்த மனுவை நேரடியாக நீதிமன்றம் ஏற்க இயலாது. எந்தவொரு மனுவும் அரசுத் தரப்பின் வழியாகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இது ஒரு முறைப்படி செயல்முறை. நேரடியாக மனுவைத் தாக்கல் செய்ய முடியாது" என்று கடுமையாக விமர்சித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நீதிபதி நேரடியாக உத்தரவு பிறப்பித்து, "அவரை உடனே நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றுங்கள். இது கோர்ட்டின் நிலைமையை பாதிக்கும் செயல்" என்று தெரிவித்தார்.

அதன்படி, அப்போதைய நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அந்த நபரை பேசாமல் பிடித்து வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர், அந்த நபரை தனிப்பட்ட காவல் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்க ரேணுகாசாமி என்பவர், சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தர்ஷன் தற்போது ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'லப்பர் பந்து' போல மாறிய வாழ்க்கை..! இந்த விஷயத்தில் 'சதம்' அடித்த ஹீரோ தினேஷ்..!
தற்போது அவர் பெங்களூரு சிறையில் உள்ளபோதும், அவரை பல்லாரி சிறைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பல்லாரி சிறை பாதுகாப்பு மற்றும் தனிமை காரணமாக மாற்றம் தேவைப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்த சம்பவம், பெங்களூரு நீதிமன்றத்தில் பாதுகாப்பு செயல்முறை குறைகள் குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளது. பொதுவாக, சிறந்த பாதுகாப்புடன் மட்டுமே முக்கிய குற்றவாளிகள் தொடர்பான விசாரணைகள் நடைபெறும் நீதிமன்றங்களில், இப்படி ஒருவர் எப்படி அனுமதி இல்லாமல் நுழைந்து, நேரடியாக நீதிபதியின் முன் பேசுகிறார்? என்பது கவலையைக் கிளப்பியுள்ளது.. ஆகவே இந்தச் சம்பவம், ஒரு முக்கியமான கொலை வழக்கின் விசாரணைக்குள் ஒரு தனிநபர் தலையிடும் முயற்சி என்பதையும், அதன் மூலமாக நீதிமன்ற செயல்முறை மீதான பொது நம்பிக்கையை சோதிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் அபாயத்தையும் வெளிக்கொண்டு வருகிறது. தர்ஷன் தொடர்பான வழக்கு இன்னும் குற்றச்சாட்டு நிலைமையில் இருக்கிறது. விசாரணை தொடரும் வரை, அவர் குற்றவாளி என்று கூற முடியாது என்பது சட்ட அடிப்படை.

எனவே, இந்த வழக்கின் மீது கூடுதல் பரிசீலனை, பாதுகாப்பு, மற்றும் சட்ட நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சட்டவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர். நீதிமன்றம் என்பது நியாயத்தின் கண். அதனுள் உரிமை மீறல்கள் இடம் பெறுவது நியாயத்தின் மீது மை கலப்பதாகும்.
இதையும் படிங்க: 5 வருஷ லவ்-மா.. அப்படியெல்லாம் விட முடியாது..! காதல் கதையை போட்டுடைத்த நிவேதா பெத்துராஜ்..!