இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் எஸ்மா சட்டத்தைத் திணிக்கும் மோடி அரசின் போக்கை கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயு, கச்சா எண்ணெய் முதலானவை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். உணவகங்கள் மூடப்படுகின்றன., இந்தச் சூழ்நிலையை முன்னுணர்ந்து முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம் என்றும் பொதுமக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல், அரசியல் பொறுப்புணர்வோடு செயல்படாத மத்திய பாஜக அரசை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு போற்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பலரும் எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கைகளை மதிக்காமல் மோடி அரசு அலட்சியமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். இப்போது வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு விநியோகம் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் 'எஸ்மா சட்டத்தை' மத்திய பாஜக அரசு பிறப்பித்து இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் புகழ்பாடுவதை நிறுத்துங்கள்! விசிகவில் எதிர்ப்பு குரல்!! திருமாவளவன் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
கொரோனா வந்த போதும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போதும் இதே போலத்தான் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மோடி அரசு நடந்து கொண்டது என்று தெரிவித்த திருமாவளவன், இப்போதும் மோடி அரசு அதே போலத்தான் நடந்து கொள்கிறது என்றார்.
எஸ்மா சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தவே மோடி அரசு முயற்சிக்கும் என்றும் மின்சார அடுப்புகளை மானிய விலையில் கிடைக்கச் செய்யவேண்டும்., கிராமப்புற மக்களுக்குக் கூடுதலாக மாதம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கவேண்டும்., சோலார் மின்வசதி ஏற்படுத்திக்கொள்ள உணவகங்களுக்கு மானியம் வழங்கவேண்டும்., தேவையான இடங்களில் மையப்படுத்தப்பட்ட சமையல்கூட வசதியை உருவாக்கி இலவசமாக உணவு வழங்கவேண்டும்., இவற்றுக்கான நிதிச்சுமையை வழக்கம்போல மாநிலங்களின் தலையில் கட்டாமல் எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கும் 'பிஎம் கேர்ஸ்' நிதியிலிருந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: திமுக - விசிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!! வலிமைக்கேற்ப கோரிக்கை... திருமா. பேட்டி..!!