தமிழ் சினிமாவில் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுபவர் தான் நடிகை வனிதா விஜயகுமார், அப்படிப்பட்ட வனிதா தற்போது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். அவரது இயக்கத்தில் மகள் ஜோவிகா தயாரித்த ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம், ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரது விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. குடும்பத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் மற்ற படங்களில் உள்ள காட்சிகளை எடுத்து உபயோகப்படுத்தியதை போல் இருக்கிறதே என சில திரைப்பட விமர்சகர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக, சில திரை மற்றும் கதையாசிரியர்கள், " இந்த படத்தில் காணப்படும் சில காட்சிகள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவை போன்ற உணர்வை வெளிப்படையாக ஏற்படுத்துகின்றன" என விமர்சனம் செய்தனர். ஏற்கனவே கொந்தளிப்பதில் வல்லவரான வனிதா, இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலமாக கொந்தளித்ததோடு மட்டுமல்லாமல் சவால் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர், " நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். என்னுடைய படத்தை குறித்து பேசுகிறவர்கள் முதலில் படத்தை பாருங்கள். அதன் பிறகு என்னை என்ன திட்டினாலும் நான் வாங்கிக்கொள்கிறேன். என் படத்தில் இருக்கும் எல்லா கண்டென்டும் என்னுடைய ஒரிஜினல் கண்டென்ட் தான். சில சினிமா விமர்சகர்கள் மீது ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்கின்றன. மேலும், சில விமர்சகர்கள் படத்தை சரியாகப் பார்க்காமல் விமர்சிக்கிறார்கள்.
vanitha vijaykumar video - இதனை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்..
என் படத்திலிருந்து ஒருகாட்சியைக் காப்பி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா... நிரூபிக்க முடிந்தால், சொல்லுங்கள் நான் சினிமாவை விட்டுவிடுகிறேன். முழுமையாக சென்று விடுகிறேன் சினிமாவை விட்டே...நீங்கள் முதலில் படம் பார்த்தால் தானே உண்மை புரியும். கணவன் மனைவிக்குள் இருக்கும் உணர்வுகளை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளோம் இந்த படத்தில்" என பேசிய வனிதாவின் இந்த பேச்சு, சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: இளையராஜா - வனிதா விஜயகுமார் பாட்டு விவகாரம்..! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பால் ஷாக்கில் இசைஞானி..!

‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிவராத்திரி தூக்கம் எது’ என்ற பாடல், 1990-ம் ஆண்டு வெளியான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இந்த பாடல் என்னுடைய உரிமை என இளையராஜா, இப்படக்குழுவின் மீது ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கும் பதிலளித்த வனிதா, " பாடலுக்கான உரிமையை இசை நிறுவனத்திடமிருந்து பெற்றோம். மேலும் வெளியீட்டுக்கு முன் இளையராஜாவை நேரில் சந்தித்து, அவரது ஒப்புதலையும் பெற்றோம்” என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இடைக்கால தடையை மறுத்து, தயாரிப்பு நிறுவனத்துக்கு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெற்ற தொகையை முதலீடாக வைத்து, தனது மகளுடன் இணைந்து இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கதை அம்சத்தில் உருவான இப்படம், உணர்வுப் பூர்வமானதாக இருப்பதாக விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துகளும் கூறுகின்றன. "இந்த படம் கணவன் மனைவிக்குள் ஏற்படும் உணர்வுகளைத் தொட்டுச் செல்லும். நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையை மற்ற எந்தக் கதையுடனும் ஒப்பிட முடியாது" என்று வனிதா தெரிவித்து இருக்கிறார். ஆகவே, வனிதா விஜயகுமாரின் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம், வெறும் ஒரு படமாக மட்டுமல்ல, அது ஒரு பெண் இயக்குநர், ஒரு தாய், ஒரு சுயநினைவுடைய கலைஞர் என பல அடையாளங்களின் பிரகடனமாக அமைந்துள்ளது.

விமர்சனங்கள் மேலோட்டமாக இருக்கக்கூடாது என்பது அவரது வலியுறுத்தலாக பார்க்கப்படுகிறது. தற்போது, அவர் விட்ட சவால் குறித்த விவகாரங்கள் எப்படி முடிவுக்கு வருமென்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
இதையும் படிங்க: இளையராஜா வீட்டு மருமகளாக வேண்டியவள் நான் - சர்ச்சை...! நடிகை வனிதா விஜயகுமார் அதிரடி விளக்கம்..!