திரையுலகில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான, கன்னட திரைப்படமான "ஜம்பதா ஹுடுகி" மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் யாஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தினால் தென்இந்தியா முதல் வட இந்தியா வரை ஒருவரது புகழ் பரவியது என்றால் அதுதான் நவீன் குமார் கவுடா என்கின்ற யாஷ். இன்று பலரது கனவு நாயகனாக வலம் வரும் யாஷுக்கு, வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.

இப்படி பட்டவர் இன்று ஃபேமஸாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அவரை ஏற்று கொள்ளாத கன்னட ரசிகர்கள், 2008 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த "மொக்கினா மனசு" திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு ராஜதானி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி என பலப்படங்ககளில் நடித்து ஹிட் கொடுத்து வந்தார்.
இதையும் படிங்க: குளோனிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்..! அச்சு அசலாக அவரை போலவே இருக்கும் இவர் யார்..!

இப்படி இருக்க, தற்பொழுது சினிமாவில் தொடர் வெற்றிகளை கண்டு வரும் நடிகர் யாஷ், நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமானின் மிரட்டும் இசையில், நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சாய்ப்பல்லவி ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படமான "ராமாயணம்" படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் ராவணனாக நடிக்கும் நடிகர் யாஷுக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால் 'மண்டோதரி' என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார்.

புராணங்களில் சொல்லப்பட்ட ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணனாக நடிகர் யாஷும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் கும்பகர்ணனாக பாபிதியோல், அனுமானாக சன்னி தியோல், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷோபனாவும் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் ராமாயணத்தின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில் எடிட்டிங் எல்லாம் முடிந்து அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினாரால் கூறப்படுகிறது.

மேலும், தற்பொழுது மும்பையில் படமாக்கப்பட்டு வரும் ராமாயணம் இரண்டாம் பாகத்தில் தான் நடிகர் யாஷ் ராவணனாக களம் இறங்கி நடித்து வருகிறார். இப்பொழுது நடித்து வரும் இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகார பூர்வமாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். அடுத்த இரண்டு வருட தீபாவளி இராமாயண கொண்டாட்டத்தில் இருக்க போகிறது.

இப்படி இருக்க ரூ. 800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் கிலிம்ப்ஸ் டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வெற்றி நடைபோடும் விஜய் ஆண்டனியின் "மார்கன்" படம்..! 'ஸ்னீக் பிக்' காட்சி வெளியாகி வைரல்..!