பாலிவுட் திரை உலகின் முத்திரை பதித்த, அழகும் திறமையும் நிறைந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் கிருத்தி சனோன். இவர் தேரே இஷ்க்மெய்ன் திரைப்படத்தில் தமிழ் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய ரசிகர்களிடையே அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, பாலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். இப்படி இருக்க சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, கிருத்தி சனோன் மும்பையின் பிரபல பிரீமியம் விலையுயர்ந்த பகுதியில் அமைந்துள்ள பாந்திரா பாலி ஹில் பகுதியில் ஒரு சொகுசு கடற்கரை வீடு வாங்கியிருக்கிறாராம்.
இந்தச் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படியாக கிருத்தி சனோனின் புதிய வீட்டின் முக்கிய அம்சங்கள் என பார்த்தால், இடம் - பாந்திரா பாலி ஹில் அதாவது மும்பையின் மிகவும் பிரபலமான பிரீமியம் குடியிருப்பு பகுதிகளில் மொத்தம் 7,302 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் மதிப்பு ரூ.78.20 கோடியாம். இதில் 6 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி.. கடற்கரைக்கு அருகில் அமைந்து இருப்பதால், கடல்காற்றும், இயற்கை அழகும் நிரம்பிய வீடு.. உயர்தர உள்கட்டமைப்புகள், லக்ஷுரி அமெனிடிகள் மற்றும் முழுமையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய இந்த வீடு நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசாங்கத்திற்கு செலுத்திய வரி மட்டும் ரூ.3.91 கோடியாகவும், பதிவு கட்டணம் ரூ.30,000மும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வீடு கிருத்தி சனோனின் பெயரிலேயே பதிவாகியுள்ளது. அவர் பெண் என்பதனால், மகாராஷ்டிர அரசின் விதிகளின்படி அவருக்கு 1% வரி தள்ளுபடி கிடைத்துள்ளது. மகாராஷ்டிர அரசில் பெண்கள் சொத்து வாங்கும் போது இவ்வகை வரி சலுகை வழக்கமாக வழங்கப்படுகிறது. திரைப்படங்களில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்ற கிருத்தி சனோன், தனது திரை பயணத்தை சொத்து முதலீடு, வணிக வளர்ச்சி என பல துறைகளிலும் விரிவுபடுத்தி வருகிறார்.

அவர் கடந்த சில ஆண்டுகளில் நடித்த முக்கியமான திரைப்படங்களில் நல்ல லாபத்தை பெற்று வருகிறார். இந்த நிலையில், மும்பையில் கடற்கரை அருகே ரூ.78.20 கோடி மதிப்பிலான சொகுசு வீடு வாங்கியிருப்பது அவரது தொழில்முனைவோன்மையை, எதிர்காலம் குறித்து செய்யும் திட்டமிடலையும் வெளிப்படுத்துகிறது. மேலும் பாந்திரா பாலி ஹில் என்பது பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் உயர்மட்ட சமூகத்தின் பகுதிகளால் நிரம்பிய ஒரு பிரிமியம் இடம். அதில், ஷாரூக் கான், சல்மான் கான், சைஃப் அலி கான், கரீனா கபூர், ஜன்வி கபூர் என இவர்களும் பாந்திரா மற்றும் அதனோடு இணைந்த பகுதிகளில் சொகுசு வீடுகளில் வசிக்கின்றனர்.
இதையும் படிங்க: தென்னிந்திய நடிகைகளை அவமானப்படுத்திய பாலிவுட் திரையுலகம் - நடிகை மதுபாலா ஆவேசம்..!
இப்போது கிருத்தி சனோனும் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டார். இச்செய்தி வெளியாகியதிலிருந்து, கிருத்தி சனோனின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். அதோடு, இளம் பெண்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறார் எனவும், தனது சொந்த முயற்சியால் இவ்வளவு உயரம் அடைந்தது பெருமைக் குரியது எனவும் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்படுகிறது. கிருத்தி சனோன் தற்போது நடிகையை தாண்டி, வணிகத் துறையிலும் தன் அடித்தளத்தை அமைத்து வருகிறார். சில ஸ்கின் கேர் மற்றும் ஃபிட்னஸ் தொடர்பான ப்ராண்ட்களில் அவர் பங்கு வகிக்கிறார். தனது சொந்த ஸ்கின் கேர் பிராண்ட் D2C (Direct to Consumer) நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதுடன், பேஷன் ஃபேஸ்ட் சந்தைகளிலும் ஈடுபாடு காட்டியுள்ளார். இந்த வீடு வாங்கியிருப்பது, அவரது வணிக நோக்கத்தில் மிக முக்கியமான முதலீடாகக் கருதப்படுகிறது.

ஆகவே கிருத்தி சனோன் என்ற பெயர் இப்போது வெறும் சினிமா நடிகையைக் குறிக்காமால் அவர் சுயமாக செயல்படும், திட்டமிடும், வெற்றிகரமான பெண் என்ற அடையாளத்தையும் உருவாக்கியுள்ளது. ரூ.78.20 கோடி மதிப்பிலான கடற்கரை வீடு வாங்கியிருப்பது, அவரது வளர்ச்சியின் மற்றொரு படி. ஒரு பெண் தனியாக, சுயமாக, சொத்துகளிலும் முதலீட்டிலும் சாதனை படைத்திருப்பது இன்றைய தலைமுறைக்கே ஒரு உற்சாகமான செய்தியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்வோம்-ல..! ரஜினிக்காக ஓ.பன்னிர்செல்வம் என்ன செய்திருக்கார் பாருங்க..!