நடிகர் தனுஷ் நடிப்பில் முழுக்க முழுக்க உருவாகிய திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தான் ‘குபேரா’. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் கடந்த மாதம் வெளியானது. தற்போது, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த ‘குபேரா’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், டிஜிட்டல் தளத்திலும் ரசிகர்களின் ஆதரவைத் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படம் ஒரு தனித்துவமான கதைக்களத்தை கொண்டுள்ளது. பணம், அதிகாரம், எதிர்ப்புகள் மற்றும் மனித உறவுகளின் நுணுக்கங்களை கலந்துத் தந்த இந்த படம், பாரம்பரிய சாமானியரின் வாழ்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ், தனது இயல்பான நடிப்பின் மூலம், கதையின் ஒவ்வொரு பகுதியிலு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்றே சொல்லலாம். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.மேலும் இப்படத்தில் நாகர்ஜூனாவை வித்தியாசமான வேடத்தில் பார்க்க முடிந்ததோடு, அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களின் நினைவில் நீண்ட நாட்கள் நிலைத்து நின்றுவிடும் வகையில் அமைந்துள்ளது.

இதனை தொடர்ந்து, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள பாடல்களும் பின்னணிச் இசையும், திரைப்படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே பல்வேறு மியூசிக் பிளாட்ஃபாரங்களில் மில்லியன்கள் கணக்கில் கேட்கப்பட்டு, ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இப்படிப்பட்ட இத்-திரைப்படம் வெளியாகி மூன்றாவது வாரத்தை கடந்தும், பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ரூ.134 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள ‘குபேரா’, தனுஷின் பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தெலுங்கு திரையுலகிலும் அவர் இந்த படத்தின் மூலம் புதிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இப்படி இருக்க, அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் வெளியாகும் செய்தியை, இந்தியா மட்டுமல்லாமல், உலகளாவிய தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் கேட்டு ஓடிடி வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 1000 கோடி பட்ஜெட் நடிகை ராஷ்மிகாவா..! சொல்லவே கூச்சமா இருக்கு.. தனுஷ் பேச்சுக்கு ஹீரோயின் ரியாக்ஷன்..!
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரி வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சொனலி நாரங்க் புரொடக்ஷன்ஸ் இணைந்து வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், “The Wait is Over – July 18, Streaming on Amazon Prime Video” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜூலை 18ஆம் தேதி முதல் ‘குபேரா’ திரைப்படம் "அமேசான் பிரைம் வீடியோ தளத்தில்" ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரைப்பட விமர்சகர்களும், "குபேரா என்பது வெறும் ஒரு வணிகத் திரைப்படமல்ல... அது சமூகத்துக்குள் நுழைந்து அதை சிந்திக்க வைக்கும் ஒரு முக்கியப் படைப்பு. தனுஷ் தனது நடிப்பின் பன்முகத் திறமையை இந்த படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார்" என பாராட்டி வருகின்றனர்.

இந்த ஓடிடி வெளியீட்டின் மூலம், ‘குபேரா’ திரைப்படம் மேலும் அதிகமான பார்வையாளர்களை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையதளத்தில் வெளியான பிறகு, சமூக ஊடகங்களிலும் மீண்டும் இந்தப் படம் பற்றிய விவாதங்கள், விமர்சனங்கள், சினிமா பகிர்வுகள் என அனைத்தும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையும் படிங்க: குப்பை கிடங்கில் தனுஷ் ராஷ்மிகா... ஏழு மணி நேரம் என்ன செய்தார்கள் - நடிகரே கூறிய உண்மை...!