தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய தனுஷ், தற்பொழுது கோலிவுட், பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இப்படி, இன்று உலகையே தனது திறமையால் கையுக்குள் வைத்து கலக்கி வரும் தனுஷின் ஆரம்ப வாழ்க்கையில் அவருக்கு அச்சாணியாக இருந்த முதல் படம் 2002-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான "துள்ளுவதோ இளமை" என்ற திரைப்படம் தான். அவர் நடித்த படங்களை பார்த்து அவரை பலரும் அவமானப்படுத்தினர். ஆனால் தனக்கு வந்த எந்த கேலி கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் பல படங்களில் நடித்து இன்று தனக்கென ஓர் இடத்தை திரையுலகில் பிடித்துள்ளார்.

அப்படிப்பட்ட நடிகர் தனுஷ் இதுவரை, துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, ட்ரீம்ஸ், சுள்ளான், புதுக்கோட்டை சரவணன், தேவதையை கண்டேன், அது ஒரு கனா காலம், திருவிளையாடல் ஆரம்பம், புதுப்பேட்டை, பரட்டை என்கின்ற அழகு சுந்தரம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி, உத்தமபுத்திரன், ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, அம்பிகாபதி, நையாண்டி, மரியான், வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி, தங்கமகன், தொடரி, கொடி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, வடசென்னை, அசுரன், பக்கிரி, என்னை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ், கலாட்டா கல்யாணம், ஜகமே தந்திரம், கர்ணன், மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், ராயன், இளையராஜா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் குபேரா, தனுஷ் 55, இட்லி கடை, D56, மாரியப்பன் உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாக இருக்கிறது.
இதையும் படிங்க: படத்திற்காக நடிகை கயாடு லோஹர் செய்த காரியத்தை பாருங்க..! வெளியான வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்த சூழலில், நடிகர் தனுஷை போலவே கேரளா மாநிலத்தில் உள்ள எர்னாகுள நகரத்தில் பிறந்த நடிகை அமலா பால் கிறிஸ்துவ மதத்தினை சார்ந்தவர். அமலா பால் கல்லூரியில் படிக்கும் பொழுதே படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டதால் படவாய்ப்புக்காக பல இடங்களில் அலைந்து திரிந்தார். பின் கேரளாவில் உள்ள மாடலிங் துறையில் பணியாற்றிய அமலா பாலுக்கு 2009-ம் ஆண்டு "நீலதம்ரா" என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவருக்கும் பிடித்து போக பின் தமிழில் நடிக்க களமிறங்கினார்.

தமிழில் ஆரம்பத்தில் வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கான சில ரசிகர்களை உருவாக்கினார். இதனை அடுத்து "மைனா" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய தமிழ் திரையுலகில் தனக்கான ரசிகர்களை பெற்றார். மேலும் நடிகர் விஜயுடன் இவர் நடித்த தலைவா, விக்ரமின் தெய்வத்திருமகள், ஆர்யாவின் சேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அபார திறமையை காட்டியுள்ளார்.

இப்படிப்பட்ட அமலா பால், கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகனும் உள்ளார். இப்படி இருக்க, மைனா, சிந்து சமவெளி, வீரசேகரன், தெய்வத்திருமகள், விகடகவி, வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி, கடவர், விக்டிம், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இப்படி பல படங்களில் நடித்து மிகப்பெரிய ஸ்டாராக இருக்கும் இவர்கள் இருவரும் இணைந்து, வேலையில்லா பட்டதாரி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். இவர்களது நடிப்பு பலருக்கும் பிடித்திருந்ததை அடுத்து அப்படம் பெரிய ஹிட் ஆனது. இப்படி பட்ட படத்தில் நடிக்கும் பொழுது தனுஷ் நடந்து கொண்ட விதங்களை உண்ணிப்பாக கவனித்த அமலா பால், அதனை குறித்து கூறியிருக்கிறார். அதன்படி அவர் பேசுகையில், " 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நான் நடித்திருதேன். அப்பொழுது இடைவெளியின் நேரத்தில் நாங்கள் அனைவரும் கேரவனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். அப்பொழுது தான் நான் ஒன்றை கவனித்தேன். என்னவெனில் நடிகர் தனுஷ் பார்க்கத்தான் ஒல்லியாக இருக்கிறார். ஆனால், அவர் அதிகமாகவே சாப்பிடுவார். ஆனால் அசைவத்தை தொடமாட்டார். முழுக்க முழுக்க சைவ உணவை மட்டுமே சாப்பிடுவார். அதே வேளையில் முட்டை மட்டும் அதிகம் விரும்பி சாப்பிடுவார்.

இப்படி சாப்பிடும் பொழுது எல்லாம் அவர் ஒரு காரியத்தை செய்வார். என்னவெனில் அவருக்கு மிகவும் பிடித்தது கவுண்டமணி சாரின் காமெடி தான். அதனாலேயே சாப்பிடும் பொழுது எல்லாம் கேரவனில் உள்ள டிவியில் கவுண்டமணி காமெடியை போட்டுவிட்டு, அதனை பார்த்த படியே தான் சாப்பிடுவார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அழகு இருந்தாதான் மார்க்கெட்.. அதுல்யா ரவி செய்த ட்ரிக் உண்மையா.. நடிகை ஓபன் டாக்..!