• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மாதவிடாய் ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை..!! ஏர்போர்ட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அனுபவம்.. நடிகை லதா ராவ் ஓபன் டாக்..!

    நடிகை லதா ராவ் மாதவிடாய் காரணாமாக ஏர்போர்ட்டில் ஏற்பட்ட கஷ்டத்தை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Thu, 03 Sep 2026 12:43:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-latha-rao-reveals-shocking-chennai-airport-experience-tamilcinema

    தமிழ் சின்னத்திரையில் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகைகளில் ஒருவர் லதா ராவ். சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக இருக்கும் இவர், சின்னத்திரையைத் தாண்டி சில திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் லதா ராவ், தன்னுடைய வாழ்க்கையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சம்பவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். குறிப்பாக பெண்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தையும் அவர் அந்த வீடியோ மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    லதா ராவ் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’, ‘திருமதி செல்வம்’, ‘வேலன்’, ‘விசாலம்’ உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர். நீண்ட காலமாக சீரியல் துறையில் பயணித்து வரும் இவர், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சின்னத்திரையில் நடிகையாக மட்டுமல்லாமல், தனது குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக பயணித்து வருகிறார் லதா ராவ். லதா ராவின் கணவர் ராஜ்கமலும் சின்னத்திரை நடிகர்தான். இருவரும் சீரியல் துறையில் பணியாற்றியபோது காதலித்து, பின்னர் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    திரையுலகில் இருப்பவர்கள் என்றாலே எப்போதும் பரபரப்பான வாழ்க்கைதான் என்றாலும், லதா ராவ் - ராஜ்கமல் தம்பதி குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வரும் பதிவுகள் மூலம் தெரிகிறது. சின்னத்திரையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய லதா ராவுக்கு பின்னர் சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. சீரியல்களில் பிரபலமான பல நடிகர், நடிகைகளுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது வழக்கம். அதேபோல் லதா ராவுக்கும் சினிமா கதவு திறந்தது.

    இதையும் படிங்க: அண்ணா.. இந்த பிரச்சனை உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. பார்த்துக்கொள்ளுங்கள்..!! CM விஜய்யிடம் நடிகர் கார்த்தி வைத்த கோரிக்கை..!

    ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘தில்லாலங்கடி’ திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்தார் லதா ராவ். அந்த கதாபாத்திரம் மூலம் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார். அதன்பிறகு ‘கொட்டிகொப்பா 2’, ‘அதிசய உலகம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களைத் தொடர்ந்து ஓடிடி தளங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ‘சுழல்’ வெப் சீரிஸிலும் அவர் நடித்திருந்தார். சின்னத்திரையில் நல்ல வரவேற்பு, நடிப்பு அனுபவம், அழகு என பல அம்சங்கள் இருந்ததால், திரைப்படத் துறையிலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு லதா ராவுக்கு இருந்திருக்கலாம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை.

    latha-rao-reveals-shocking-chennai-airport-experience

    சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வாய்ப்புகளுக்குப் பிறகு, மீண்டும் சின்னத்திரை மற்றும் சமூக வலைதளங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லதா ராவ் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது வாழ்க்கை தொடர்பான பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதோடு, பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை சார்ந்த விஷயங்களையும் அவ்வப்போது பேசுகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சூழ்நிலையைப் பற்றி அவர் அந்த வீடியோவில் வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.

    லதா ராவ் ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. அவர் வழக்கமாக தனது கைப்பையில் சானிட்டரி நாப்கின் வைத்திருப்பாராம். பயணங்களில் திடீரென மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு அவற்றை கொடுத்து உதவியிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் சமீபத்தில் தனது கைப்பையை சுத்தம் செய்தபோது அதிலிருந்த நாப்கினை எடுத்துவிட்டதாகவும், அதன் காரணமாக அந்த நேரத்தில் தனது பையில் பேட் இல்லாமல் போய்விட்டதாகவும் லதா கூறியுள்ளார். இதனால் விமான நிலையத்தில் இருந்தபோது அவர் பதற்றமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    வீடியோவில் லதா ராவ் கூறியதாவது: “ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்திருக்கிறேன். இங்கே வந்ததும் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. அதை உங்களிடம் பகிர வேண்டும் என்று தோன்றியது. எதிர்பாராத தேதியில் இன்று எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. இந்த தேதியில் எப்போதும் வராது. ஆனால் வந்துவிட்டது” என்று கூறினார். தன்னுடைய கைப்பையில் எப்போதும் சானிட்டரி பேட் வைத்திருப்பேன் என்றும், பயணங்களில் நிறைய பேருக்கு அதை கொடுத்து உதவியிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் தனது கைப்பையை சுத்தம் செய்ததால் தற்போது அதில் பேட் இல்லாமல் போய்விட்டதாகவும், அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றமடைந்ததாகவும் கூறினார்.

    இந்த அனுபவம், பயணங்களின்போது பெண்கள் தங்களுடைய கைப்பையில் தேவையான அவசரப் பொருட்களை வைத்திருப்பதன் அவசியத்தையும் நினைவுபடுத்துகிறது. இதன்பிறகு சானிட்டரி நாப்கின் வாங்குவதற்காக விமான நிலையத்தில் விசாரித்ததாக லதா கூறினார். அப்போது விமான நிலையத்தில் பணம் கொடுத்தால் சானிட்டரி நாப்கின் வழங்கும் வசதி இருப்பதாக முன்பு தெரிந்திருந்தாலும், தற்போது அந்த வசதி இல்லை என்று கூறியதாக அவர் தெரிவித்தார். அவரது போர்டிங் கேட் 1 என்பதால், ஏழாவது கேட் பகுதியில் பார்மசி இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    latha-rao-reveals-shocking-chennai-airport-experience

    உடனே அங்கு விரைந்து சென்றதாகவும், ஆனால் அந்த நேரத்தில் பார்மசியில் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார். இதனால் அங்கு ஊழியர்கள் வரும்வரை காத்திருந்த அவர், இறுதியில் சானிட்டரி பேட் வாங்கியுள்ளார். இதற்கிடையே அவரது போர்டிங்கும் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். எப்படியோ நாப்கினை வாங்கிவிட்டு மீண்டும் தனது போர்டிங் கேட்டுக்கு சென்றதாக அவர் அந்த வீடியோவில் விளக்கியுள்ளார். இந்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததற்கான காரணத்தையும் லதா ராவ் தெளிவுபடுத்தியுள்ளார். “இதை ஏன் சோஷியல் மீடியாவில் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். மாதவிடாய் என்பது கேவலமான விஷயம் கிடையாது” என்று அவர் குறிப்பிட்டார்.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, குறிப்பாக நீண்ட பயணம் மேற்கொள்ளும்போது, தங்களுடைய கைப்பையில் சானிட்டரி நாப்கின் இருக்கிறதா என்பதை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், தற்போது மாதவிடாய் இல்லாத பெண்கள்கூட தங்கள் பையில் ஒரு நாப்கின் வைத்திருந்தால், அவசரத்தில் தேவைப்படும் மற்றொரு பெண்ணுக்கு அதை கொடுத்து உதவ முடியும் என்றும் லதா ராவ் கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்துதான் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. மாதவிடாய் என்பது பெண்களின் இயல்பான உடல் நிகழ்வு என்றாலும், இன்றளவும் பல இடங்களில் அதைப் பற்றி வெளிப்படையாக பேச தயக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் திடீரென மாதவிடாய் ஏற்பட்டால் பெண்கள் எதிர்கொள்ளும் சங்கடம் மற்றும் பதற்றம் பல நேரங்களில் வெளியே சொல்லப்படுவதில்லை.

    அப்படிப்பட்ட ஒரு தனிப்பட்ட அனுபவத்தை லதா ராவ் வெளிப்படையாக பகிர்ந்திருப்பது, அந்த விஷயத்தை இயல்பாகப் பார்க்க வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துகிறது. விமான நிலையம் போன்ற இடங்களில் அவசரத் தேவைகளுக்கான சானிட்டரி பொருட்கள் எளிதாக கிடைப்பது பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் அவரது அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல், பயணம் செய்யும் பெண்கள் தங்களது கைப்பையில் சானிட்டரி நாப்கின் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது. லதா ராவ் இந்த சம்பவத்தை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நேரடியாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரபலங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை பொதுவாக வெளியில் பகிர்வதில்லை.

    ஆனால், தன்னுடைய அனுபவம் மற்ற பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதியதால் அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதிலும், “உங்களுக்கு பீரியட்ஸ் இல்லையென்றாலும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம்” என்ற அவரது கருத்து, பெண்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பான்மையை வலியுறுத்துகிறது. ஒரு விமானப் பயணத்திற்கு முன் ஏற்பட்ட சாதாரணமான அவசர நிலை போல் தெரிந்தாலும், அதன் பின்னால் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான நடைமுறை சிக்கலை லதா ராவ் தனது வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

    latha-rao-reveals-shocking-chennai-airport-experience

    இதனால் அவரது இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மாதவிடாய் குறித்து பேசுவதில் எந்த அவமானமும் இல்லை; அது இயல்பான ஒன்று என்பதை இயல்பாகவே பேச வேண்டும் என்ற லதா ராவின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாக மட்டுமல்லாமல், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தனது அனுபவங்களை பகிர்ந்து வரும் லதா ராவ், இந்த முறை ஒரு தனிப்பட்ட சம்பவத்தை விழிப்புணர்வு செய்தியாக மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

     

    இதையும் படிங்க: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முயற்சியில் கமல்ஹாசன்..!! டெஸ்ட் ஷூட்டில் கத்தி ஏந்தி கமல் கொடுத்த மாஸ் போஸ்..!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share