திரைப்பட உலகில் சாதனைகள் செய்து வரும் மலையாள சினிமா, தற்போது 'லோகா' படத்தின் மூலம் புதிய உயரத்தை தொட்டிருக்கிறது. துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், ஒணம் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. முதல் நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘லோகா’ தற்போது வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது.
இப்படிப்பட்ட 'லோகா' திரைப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார்.
இது ஒரு மர்மம் மற்றும் நகைச்சுவை கலந்த திரில்லர் திரைப்படமாகும். திரைப்படத்தின் கதையின் மையம், வாழ்க்கையின் சிக்கலான தருணங்களில் மனிதர்களின் உணர்வுகள், அவர்களின் முடிவுகள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்பவற்றை சுற்றி சுற்றிக் கொள்கிறது. கதையின் முக்கிய மையமாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள பாத்திரம் அமைகிறது. அவருடைய கதாபாத்திரத்தில் இருக்கும் மர்மம், அவருடைய நடிப்புத்திறன் மற்றும் குணநலன்கள், திரை உலகில் இதுவரை நாம் அதிகம் காணாத ஒரு புதிய பாணியை பிரதிபலிக்கின்றன. அவரது பங்களிப்பு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரேமலு படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த நஸ்லேன், 'லோகா' படத்தில் ஒரு முழுமையான கதாநாயகனாக நடித்துள்ளார். அவரது இயல்பான நடிப்பு மற்றும் ஹ்யூமர் டைமிங், படம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தது. மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் கல்யாணி, மிக அழுத்தமான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவருடைய நடிப்பு, கதையின் மிக முக்கியமான பகுதியாக அமைந்துள்ளது. சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படி இருக்க ‘லோகா’ திரைப்படம், வெளியான சில நாட்களில் மிகச் சிறந்த வசூலை பதிவு செய்தது. மலையாளத்தில் வெளியாகி, பிற இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானதால், இது மிக விரைவில் ஒரு பான்-இந்திய திரைப்படமாக வளர்ந்தது.

உலகளவில் படம் ரூ.202 கோடி வசூல் செய்துள்ளது. இது, மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடியை தாண்டிய 4-வது திரைப்படமாகும். இதற்கு முந்தைய மூன்று படங்கள் என பார்த்தால் புளிமுருகன், 2018 மற்றும் மன்ஜுமேல் போரான் ஆகியவையாகும். இப்படி இருக்க ‘லோகா’ திரைப்படத்தின் வெற்றியால், அதன் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ‘லோகா’ படம் வெளியாகிய சில மணி நேரங்களுக்குள், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புகழ்ச்சியின் மழையை பொழிந்தனர். விமர்சனங்களும் பெரும்பாலும் நேர்மறையானவையாகவே இருந்தன. குறிப்பாக, படத்தின் திரைக்கதை, திரைபட ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை பாராட்டப்பட்டன.
இதையும் படிங்க: சாண்டி மாஸ்டர் பேச்சால் கடுப்பான கன்னட மக்கள்..! மன்னிப்பு கேட்டு கூலாக்கிய துல்கர் சல்மான்..!
கல்யாணியின் கதாபாத்திரம் பற்றிய விவாதங்கள் ரசிகர்களிடையே அதிகம் காணப்பட்டது. நஸ்லேனின் காமெடி மற்றும் இயல்பான நடிப்பு, குடும்ப ரசிகர்களை கவர்ந்தது. ‘லோகா’ படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. மலையாள திரைப்படங்களுக்கு அடையாளமாக மாறியிருக்கும் ‘நுட்பம் மற்றும் உள்ளடக்க செழிப்பு’, இத்திரைப்படத்திலும் அடிக்கடி திகழ்கிறது. இப்படியான ‘லோகா’ இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கா, யு.கே., மிடில் ஈஸ்ட், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் வெளியிடப்பட்டது. இது மலையாள சினிமாவின் சர்வதேச வர்த்தக திறனை நிரூபிக்கின்றது. துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ், இதற்கு முன்பு பல வெற்றிப் படங்களை வழங்கி உள்ளது. ஆனால் 'லோகா', அந்த வரிசையில் மிகச் சிறந்த ஒரு படமாக திகழ்கிறது. தயாரிப்பு தரம், கதை தேர்வு மற்றும் குழுவின் ஒட்டுமொத்த பணிகள் என்பவை இந்த வெற்றியின் காரணிகள்.

ஆகவே மலையாள சினிமா நாளுக்கு நாள் புதிய உச்சங்களை தொடுகிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ‘லோகா’ திரைப்படம் விளங்குகிறது. ஒரு பண்டிகைக் காலத்தில் வெளியான இந்த படம், சாதனை மட்டுமின்றி, ரசிகர்களின் மனதிலும் நிலைத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது. ரூ.202 கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டியுள்ள இந்த படம், எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இது கொஞ்சம் ஓவரா இல்ல..! விஷாலுக்கு திருமணம் முடிஞ்சா தான் நான் கல்யாணம் பண்ணுவேன்..! அடம்பிடிக்கும் அதர்வா..!