• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து தோல்வி..!! ‘சர்தார் 2’ நம்பிக்கையும் போச்சு.. இனி விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் புதிய படமாவது கைகொடுக்குமா..!

    மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து தோல்வியுற்று வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
    Author By Bala Mon, 14 Sep 2026 12:23:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-malavika-mohanan-flop-list-continues-after-sardar-2-tamilcinema

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பயணித்து வரும் நடிகை மாளவிகா மோகனனுக்கு, சமீபகால திரைப்படத் தோல்விகள் சற்றே பின்னடைவை  ஏற்படுத்தியுள்ளன. ஒரு சில படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றாலும், அதனை தொடர்ந்து வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், தற்போது தனது அடுத்தடுத்த படங்களை  மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

    ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளான மாளவிகா மோகனன், சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும், தனது சொந்த முயற்சியின் மூலமாகவே நடிகையாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்க முயன்று வருகிறார். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 2013-ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், மாளவிகாவின் சினிமா பயணம் அங்கேயே முடிந்துவிடவில்லை. மாளவிகா மோகனனுக்கு தமிழில் நல்ல கவனத்தை பெற்றுத் தந்த திரைப்படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படத்தில் சசிகுமார் ஜோடியாக மாளவிகா நடித்திருந்தார்.

    ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் என்பதாலும், கார்த்திக் சுப்பராஜின் வித்தியாசமான இயக்க பாணியாலும் ‘பேட்ட’ ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி மாளவிகாவுக்கும் தமிழ் திரையுலகில் ஒரு நல்லெரிய வாய்ப்பு விஜய்யுடன் இணைந்து நடிப்பது. அறிமுகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு விஜய்யுடன் இணைந்து நடிப்பது. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா, ஒரே படத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தின் கவனத்தை பெற்றார்.

    இதையும் படிங்க: வெள்ளை ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மாளவிகா மோகனன்..!! கவர்ச்சி + கிளாமரில் ஆளை மயக்கும் போட்டோஸ்..!

    லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியானதால், அதன் வசூல் மற்றும் வெற்றி இரண்டும் பெரிதும் பேசப்பட்டது. அதே நேரத்தில் மாளவிகாவின் நடிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களும்  ட்ரோல்களும் அதிகமாக இருந்த வெற்றி அவருக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகளை தேடித் தன. இருப்பினும், ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வெற்றி அவருக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகளை தேடித் தந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாக வேண்டும் என்பதே மாளவிகா மோகனனின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    malavika-mohanan

    அதற்கேற்ப வெவ்வேறு மொழிகளில் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார். அதே சமயம் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். கவர்ச்சியான புகைப்படங்கள், ஃபேஷன் தொடர்பான  பதிவுகள் என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக  இருக்கும் மாளவிகா, இளம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருந்து வருகிறார். இதனால் திரைப்பட வெற்றி மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் அவருக்கான மார்க்கெட் மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களுக்குப் பிறகு மாளவிகாவிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அந்த அளவுக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பதுதான் தற்போது பேசப்படும் விஷயம்.

    தனுஷுடன் இணைந்து நடித்த மாறன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் மாளவிகாவின் வெற்றிப் பயணம் மீண்டும் கேள்விக்குறியாகியது. அதன் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் மாளவிகா நடித்தார். அந்தப் படத்திற்காக அவர் மேற்கொண்ட உடல் உழைப்பும், கதாபாத்திரத்திற்காக செய்திருந்த தயாரிப்பும் பேசப்பட்டது. விக்ரமின் வித்தியாசமான தோற்றம், பா. ரஞ்சித்தின் இயக்கம், பிரம்மாண்டமான  தயாரிப்பு என ‘தங்கலான்’ மீது ஆரம்பத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மாளவிகாவும் தனது கதாபாத்திரத்திற்கு  முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார். இருப்பினும் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை.

    இதையடுத்து மாளவிகாவின் கவனம் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியது. பிரபாஸ் நடிப்பில் வெளியான தி ராஜா சாப் திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிரபாஸ் போன்ற பான் இந்தியா ஸ்டாருடன் நடிப்பதால், இந்தப் படம் தனது மார்க்கெட்டை இந்திய  அளவில் உயர்த்தும் என்று மாளவிகா தரப்பிலும் எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. படத்தில் கிளாமர், ஆக்‌ஷன் என பல்வேறு அம்சங்களில் மாளவிகா இடம்பெற்றிருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாததால், அந்த வாய்ப்பும் அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமையவில்லை. அதேபோல், அதர்வா நடித்த ‘இதயம் முரளி’ திரைப்படத்திலும்  கிளைமேக்ஸில் சர்ப்ரைஸ் கேமியோவாக மாளவிகா தோன்றியிருந்தார். ஆனால் அந்தப் படமும் பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்யவில்லை.

    இந்த நிலையில், கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் 2 திரைப்படம் மாளவிகாவுக்கு முக்கியமான படமாக பார்க்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இரண்டாம் பாகத்தில் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த முறை வழக்கமான காதல் காட்சிகளை மட்டும் நம்பாமல், ஆக்‌ஷன் மற்றும் ஸ்டன்ட் காட்சிகளிலும் அவர் அதிகம் ஈடுபட்டதாக கூறப்பட்டது. படத்திற்காக கடுமையான பயிற்சிகளை  மேற்கொண்டு, சண்டைக் காட்சிகளில் நேரடியாக பங்கேற்றதாகவும் படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் ‘சர்தார் 2’ தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மாளவிகா ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியும் மாளவிகாவின் தோற்றம் குறித்து நகைச்சுவையாக பேசியிருந்தார். குறிப்பாக, அவரை பார்த்ததும் மோனிகா பெலூச்சி போன்ற ஒரு ரொமான்டிக் கேரக்டர் இருக்கும்  என  நினைத்ததாகவும், ஆனால் தங்களுக்கு ரொமான்ஸ் காட்சியே இல்லை என்று வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.

    malavika-mohanan

    இதனால் ‘சர்தார் 2’ படத்தில் மாளவிகாவின் ஆக்‌ஷன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாததால், மாளவிகா அந்தப் படத்திற்காக மேற்கொண்ட உழைப்பும் எதிர்பார்ப்பும் மீண்டும் ஏமாற்றத்தில் முடிந்ததாக அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் தனது தடத்தை பதிக்க வேண்டும் என்ற முயற்சியில் மாளவிகா மோகனன் நடித்த திரைப்படம் யுத்ரா. சித்தாந்த் சதுர்வேதி உள்ளிட்டோர் நடித்த அந்தப் படத்தின் மூலம் மாளவிகா இந்தி திரையுலகில் அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் பாலிவுட்டில் அவருக்கு தொடர்ச்சியாக பெரிய வாய்ப்புகள் குவியவில்லை. இதனால் பான் இந்தியா நடிகையாக வேண்டும் என்ற அவரது பயணம் இன்னும் முழுமையாக வெற்றி பெற்றதாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இத்தனை தோல்விகளுக்கு மத்தியில் மாளவிகாவுக்கு மலையாள சினிமா ஓரளவு ஆறுதலை கொடுத்துள்ளது. மோகன்லால் நடிப்பில் வெளியான ஹ்ருதயபூர்வம் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மாளவிகா மோகனனுக்கு ரூ.100 கோடி வசூலை கடந்த படமாக இந்த திரைப்படம் அமைந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் மலையாள சினிமாவில் அதே காலகட்டத்தில் வெளியான மற்றொரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றதால், அந்த வெற்றியும் மாளவிகாவுக்கு தனிப்பட்ட  திருப்புமுனையாக  மாறவில்லை என்ற பேச்சு உள்ளது.

    தொடர்ந்து வெற்றிக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனனுக்கு தற்போது மீண்டும் ஒரு வித்தியாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர்  தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்து வரும் புதிய திரைப்படம் தற்போது கவனம் பெற்றுள்ளது. ‘பாக்கெட் நாவல்’ என குறிப்பிடப்படும் இந்தப் படம் மாளவிகாவுக்கு தமிழில் மிகவும் முக்கியமானதாக அமையக்கூடும். காரணம், வழக்கமான கமர்ஷியல் படங்களை தாண்டி வித்தியாசமான கதைக்களங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற இயக்குநருடன் அவர் இணைந்ததியும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் தனக்கென ஒரு தனி பாணியை கடைப்பிடித்து வருகிறார். எனவே இருவரது கூட்டணி எந்த மாதிரியான திரை அனுபவத்தை கொடுக்கப்போகிறது என்பது எதிர்பிருப்பதுதான்.

    விஜய் சேதுபதியும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் தனக்கென ஒரு தனி பாணியை கடைப்பிடித்து வருகிறார். எனவே இருவரது கூட்டணி எந்த மாதிரியான திரை அனுபவத்தை கொடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாளவிகாவை பொறுத்தவரை, இனி ஒரு பெரிய வெற்றி மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களின் மூலம் கிடைத்த ஆரம்ப வரவேற்பை மீண்டும் ஒரு வலுவான வெற்றியின் மூலம் உறுதி செய்ய வேண்டிய கட்டத்தில் அவர் இருக்கிறார். தொடர்ச்சியான தோல்விகள் ஒரு நடிகையின் மார்க்கெட்டை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய காரணியாக இருந்தாலும், ஒரு நல்ல கதாபாத்திரம் மற்றும் சரியான படம் கிடைத்தால் நிலைமை முழுமையாக மாறிவிடும் என்பதற்கு தமிழ் சினிமாவில் பல உதாரணங்கள் உள்ளன.

    malavika-mohanan

    அந்த வகையில், தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கம், விஜய் சேதுபதியின் நடிப்பு, மாளவிகா மோகனனின் புதிய கதாபாத்திரம் ஆகியவை இணையும் ‘பாக்கெட் நாவல்’ அவருக்கு அந்தத் திருப்புமுனையை கொடுக்குமா என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பல மொழிகளில் தொடர்ந்து முயற்சி செய்து வரும் மாளவிகா மோகனனுக்கு, அடுத்த படம் வெறும் இன்னொரு திரைப்படமாக இல்லாமல், அவரது திரைப்பயணத்தை மீண்டும் உயர்த்தும் ‘கம்பேக்’ படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இதையும் படிங்க: வெள்ளை ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மாளவிகா மோகனன்..!! கவர்ச்சி + கிளாமரில் ஆளை மயக்கும் போட்டோஸ்..!

    மேலும் படிங்க
    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    தமிழ்நாடு
    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    தமிழ்நாடு
    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: 180 சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: 180 சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பு!

    பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பு!

    இந்தியா
    ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் விஜய்.!! லண்டன் பயணத்தில் வெற்றிப்படி..!!

    ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் விஜய்.!! லண்டன் பயணத்தில் வெற்றிப்படி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    தமிழ்நாடு

    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    தமிழ்நாடு
    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    தமிழ்நாடு
    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: 180 சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: 180 சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பு!

    பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பு!

    இந்தியா
    ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் விஜய்.!! லண்டன் பயணத்தில் வெற்றிப்படி..!!

    ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் விஜய்.!! லண்டன் பயணத்தில் வெற்றிப்படி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share