• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ‘மண்டாடி’ விமர்சனம்.. சூரியின் ஆக்‌ஷன் அவதாரத்துக்கு மற்றொரு மைல்கல்..!! படகு போட்டி ரசிகர்களை சீட் எட்ஜில் உட்கார வைத்ததா..!

    சூரியின் ஆக்‌ஷன் அவதாரத்த்தில் உருவான ‘மண்டாடி’ படம் குறித்த விமர்சனம் வெளியாகியுள்ளது.
    Author By Bala Fri, 11 Sep 2026 11:48:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-mandaadi-movie-review-tamilcinema

    வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்த இயக்குனர் மதிமாறன் புகழேந்தி, தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் சூரி ஆகியோர் கூட்டணியில் வெளியாகியிருக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படம் ‘மண்டாடி’. சினிமாவில் காமெடியனாக நீண்ட காலம் பயணித்த சூரி, கதையின் நாயகனாக மாறிய பிறகு தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் மீனவ மக்களின் வாழ்வியலையும், படகு போட்டியையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்துள்ளது? முழுமையாக பார்க்கலாம்.

    படத்தின் கதை என்ன?

    சென்னையில் உள்ள ஒரு தீம் பார்க்கில் வேலை பார்த்து வருகிறார் சூரி. தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சில காரணங்களால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பி வருகிறார். அங்கு பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் மீண்டும் அவரது வாழ்க்கைக்குள் வந்து நிற்கின்றன. ஊரில் நடைபெறும் படகு போட்டியை மையமாக வைத்து இரு தரப்பினருக்கு இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அந்த சூழலில் சாட்டைபுலி என்ற கதாபாத்திரத்தில் வரும் சுஹாஸின் மகனான மாரியை, மற்றொரு தரப்பை சேர்ந்த மாரி கொலை செய்ய முயற்சி செய்கிறார். இதனால் கோபமடையும் சாட்டைபுலி, மாரியை கொல்ல முடிவு செய்கிறார்.

    இந்த சூழ்நிலையில் மாரி, சூரியிடம் தஞ்சம் அடையச் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது. மாரி தன்னுடைய முன்னாள் காதலியின் மகன் என்பதை தெரிந்து கொள்ளும் சூரி, பல வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு திரும்புகிறார். ஆனால், அவர் வருவது வெறுமனே ஒருவரை காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல. மாரியின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக ஊர் பஞ்சாயத்தில் நின்று பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார். அப்போது சாட்டைபுலி ஒரு சவாலை முன்வைக்கிறார். இரு வகையறாக்களும் படகு போட்டியில் மோத வேண்டும்; அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே இனி ஊரில் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். தோல்வியடையும் தரப்பு இனி போட்டியில் இறங்கக்கூடாது என்ற முடிவும் எடுக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மீண்டும் ஒரே இடத்தில் விஜய் – அஜித்..!! லண்டனில் அரங்கேறப் போகும் அந்த அரிய சந்திப்பு.. ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா..!

    இதன் பிறகு மாரியை படகு போட்டிக்காக சூரி தயார்படுத்துகிறார். அவருக்கு பயிற்சி அளித்து போட்டியில் வெற்றி பெற வைக்க சூரி எடுக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் செல்ல, மறுபக்கம் சாட்டைபுலிக்கும் சூரிக்கும் இடையிலான பழைய பகை என்ன என்ற கேள்வி படம் முழுவதும் ரசிகர்களை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இந்த இருவருக்கும் இடையே என்ன நடந்தது? ஏன் ஒருவர் மீது ஒருவர் இவ்வளவு கோபத்துடன் இருக்கிறார்கள்? சூரி இறுதியில் சாட்டைபுலியை வென்றாரா? என்பதே மீதிக்கதை.

    mandaadi-movie-review

    சூரியின் மிரட்டல் நடிப்பு

    ‘மண்டாடி’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் சூரிதான். ஏற்கனவே கதாநாயகனாக பல படங்களில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்து வரும் அவர், இந்த படத்தில் மீனவ குடும்பத்தை சேர்ந்த ஒருவராகவே ரசிகர்களின் மனதில் பதிகிறார். சூரியின் உடல்மொழி, வசன உச்சரிப்பு, கோபம், பாசம் என ஒவ்வொரு உணர்வையும் அவர் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக படகு போட்டிக்கான பயிற்சி கொடுக்கும் காட்சிகளில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு கவனிக்க வைக்கிறது.

    அதேபோல், சாட்டைபுலியின் மகன் செய்யும் ஒரு செயலால் தன்னுடைய வீரரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் சூரி களத்தில் இறங்கி அடிக்கும் காட்சியில் அவரது ஆக்ரோஷம் வேற லெவலில் இருக்கிறது. அந்த காட்சிகளில் இனி சூரியை வெறும் ‘ஹீரோ’ என்று மட்டும் பார்க்க முடியாது; முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாகவும் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இந்த படத்தின் மூலம் சூரியின் திரைப்பயணத்தில் இன்னொரு முக்கியமான மைல்கல் சேர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

    சுஹாஸின் நடிப்பு மிரட்டல்

    சூரிக்கு அடுத்தபடியாக படத்தில் அதிகம் கவனம் பெறுவது சாட்டைபுலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஹாஸ். தெலுங்கு சினிமாவில் இருந்து வந்த நடிகராக இருந்தாலும், இந்த படத்தில் அவரது நடிப்பு எந்த இடத்திலும் அந்நியமாக தெரியவில்லை.

    குறிப்பாக தமிழ் வசனங்களுக்கான அவரது லிப் சிங்க் மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளது. குரலும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதால், படத்தை பார்க்கும்போது இது டப்பிங் செய்யப்பட்ட நடிப்பு என்ற உணர்வே பல இடங்களில் வரவில்லை. அந்த கதாபாத்திரத்தின் கோபம், வன்மம், ஆளுமை என அனைத்தையும் சுஹாஸ் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சூரி – சுஹாஸ் இருவரும் நேருக்கு நேர் நிற்கும் காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக அமைந்துள்ளன.

    முதல் பாதி செம விறுவிறுப்பு

    ‘மண்டாடி’யின் முதல் பாதி குறிப்பாக வேகமாக நகர்கிறது. சூரி ஊருக்கு திரும்புவது, மாரியை சந்திப்பது, பிரச்சனைக்குள் செல்வது, அவருக்கு படகு போட்டிக்காக பயிற்சி கொடுப்பது என அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதன்பிறகு வரும் ட்ரெயினிங் மேட்ச் மற்றும் படகு போட்டி தொடர்பான காட்சிகள் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த பயிற்சி போட்டி பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

    படகு போட்டியை வெறும் விளையாட்டு காட்சியாக மட்டும் காட்டாமல், கதாபாத்திரங்களின் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் ஊரின் கௌரவத்துடன் இணைத்திருப்பதால் அந்த காட்சிகளுக்கு கூடுதல் எடை கிடைக்கிறது. அந்த வகையில் பார்த்தால், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் பாக்ஸிங், ‘ஆடுகளம்’ படத்தில் சேவல் சண்டை எப்படி மனதில் நிற்குமோ, அதேபோல் ‘மண்டாடி’யில் படகு போட்டியும் நினைவில் நிற்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

    mandaadi-movie-review

    இரண்டாம் பாதியில் சற்று பொறுமை தேவை

    முதல் பாதியின் வேகத்துடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதியில் படம் சற்று மெதுவாகிறது. சத்யராஜ் ‘முனி’ என்ற கதாபாத்திரத்தில் கோச்சாக வருகிறார். இதன்பிறகு சூரிக்கும் சாட்டைபுலிக்கும் இடையே இருந்த பழைய உறவு என்ன, இவர்களுக்குள் பகை உருவானது எப்படி, அந்த பிரச்சனை எந்த அளவுக்கு சென்றது, மஹிமாவை சூரி ஏன் கைவிட்டார், சத்யராஜின் கதாபாத்திரத்திற்கு என்ன நடந்தது என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ல ப்ளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன.

    இந்த பகுதிகள் கதைக்கு தேவையானவை என்றாலும், சில இடங்களில் படத்தின் வேகம் குறைந்து ரசிகர்களின் பொறுமையை சோதிக்கின்றன. குறிப்பாக முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்த ப்ளாஷ்பேக் பகுதி சற்று நீளமாக தோன்றலாம். ஆனால், அந்த மெதுவான பயணத்துக்கு பிறகு வரும் கிளைமேக்ஸ் மொத்த அனுபவத்தையும் மீண்டும் தூக்கி நிறுத்துகிறது.

    அரை மணி நேர கிளைமேக்ஸ் – வெறித்தனம்!

    படத்தின் கிளைமேக்ஸ் கிட்டத்தட்ட அரை மணி நேரம் படகு போட்டியை மையமாக வைத்து நகர்கிறது. இதுதான் ‘மண்டாடி’யின் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு போட்டி கட்டத்திலும் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ரசிகர்களை சீட் எட்ஜில் உட்கார வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். போட்டியின் முடிவு என்னவாகும் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் கடைசி வரை தொடர்கிறது. ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் கிளைமேக்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதற்கு ‘மண்டாடி’யின் இறுதிப்பகுதி சிறந்த உதாரணம். குறிப்பாக படகு போட்டிகளை விரும்புபவர்களுக்கு இது நிச்சயம் திரை விருந்தாக இருக்கும்.

    மற்ற நடிகர்கள் எப்படி?

    மஹிமா, சத்யராஜ் உள்ளிட்ட படத்தின் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக சத்யராஜின் அனுபவம் அவரது கதாபாத்திரத்தில் நன்றாக தெரிகிறது. மாரி கதாபாத்திரமும் கதையின் முக்கியமான பகுதியாக அமைந்துள்ளது. சூரி அவரை எப்படி ஒரு போட்டியாளராக உருவாக்குகிறார் என்பதையும், அந்த பயிற்சியின் போது உருவாகும் உறவையும் படம் அழகாக பதிவு செய்கிறது.

    தொழில்நுட்ப ரீதியாக எப்படி?

    ‘மண்டாடி’ திரைப்படத்தின் மற்றொரு முக்கியமான சிறப்பு அதன் ஒளிப்பதிவு. படத்தின் பெரும்பாலான காட்சிகள் லைவ் லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருப்பது திரையில் நன்றாக தெரிகிறது. குறிப்பாக கடல், படகுகள், மீனவ மக்களின் வாழ்க்கை, போட்டிக்கான தயாரிப்புகள் என அனைத்தையும் செயற்கைத்தன்மை இல்லாமல் யதார்த்தமாக காட்டியிருக்கிறார்கள். படகு போட்டி காட்சிகளில் கேமரா பயன்படுத்தப்பட்ட விதமும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான வேகத்தையும் அழுத்தத்தையும் கொடுக்கிறது. குறிப்பாக போட்டி காட்சிகளில் பின்னணி இசை படத்தின் பரபரப்பை அதிகரிக்கிறது.

    மொத்தத்தில்…

    ‘மண்டாடி’ ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. முதல் பாதியின் விறுவிறுப்பு, சூரியின் ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பு, சுஹாஸின் மிரட்டல் பெர்ஃபார்மன்ஸ், பிரமாண்டமான படகு போட்டி காட்சிகள் ஆகியவை படத்தின் மிகப்பெரிய பலங்கள். இரண்டாம் பாதியின் ப்ளாஷ்பேக் சில இடங்களில் வேகத்தை குறைத்தாலும், அதன்பிறகு வரும் கிளைமேக்ஸ் அந்த குறையை பெரிதாக தெரியவிடாமல் செய்கிறது. குறிப்பாக படகு போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இறுதிக்கட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல திரையரங்கு அனுபவத்தை கொடுக்கின்றன.

    mandaadi-movie-review

    மொத்தத்தில், சினிமாவில் காமெடியனாக தொடங்கி இன்று ஆக்‌ஷன் ஹீரோவாகவும், அழுத்தமான  கதாபாத்திரங்களை  தேர்வு செய்யும் நடிகராகவும் வளர்ந்து வரும் சூரியின் வெற்றிப்பயணம் ‘மண்டாடி’யிலும் தொடர்ந்து வெற்றி பெறுகிறது. படகு போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு களம், ‘சார்பட்டா பரம்பரை’யின் பாக்ஸிங், ‘ஆடுகளம்’ படத்தின் சேவல் சண்டை போல தமிழ் சினிமா ரசிகர்களின் நினைவில் நிற்கும் வாய்ப்பு அதிகம்.

     

    இதையும் படிங்க: ரூ.25 கோடி பட்ஜெட்… ரூ.100 கோடிக்கு மேல் வசூல்..!! ‘டிசி’ வெற்றியை கொண்டாடிய கலாநிதி மாறன்.. விலையுயர்ந்த கார் பரிசு..!

    மேலும் படிங்க
    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    தமிழ்நாடு
    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    தமிழ்நாடு
    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..!  போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    அரசியல்

    செய்திகள்

    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    தமிழ்நாடு
    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    தமிழ்நாடு
    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..!  போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share