பாலிவுட் திரையுலகில் தனது அழகு, திறமை, நுட்பமான நடிப்பு மற்றும் பல்துறை திறன்கள் மூலமாக இடம் பிடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சனோன். மாடலிங், நடிப்பு, தயாரிப்பு என பல்வேறு தளங்களில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ள இவர், தற்போது புதிய முடிவொன்றால் மீடியா மற்றும் ரசிகர்களிடம் பரபரப்பை உருவாக்கியுள்ளார். இதுவரை பச்சை குத்தும் கலையைத் தவிர்த்து வந்த கீர்த்தி சனோன், தனது உடலில் முதல் முறையாக ஒரு டாட்டூவை செய்துள்ளார்.

தனது வலது கணுக்காலில், பறந்துகொண்டிருக்கும் ஒரு சிறிய பறவை வடிவத்தில் இந்த டாட்டூவை செய்துள்ளார். அவர் இந்த அழகான காட்சியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததோடு, அதற்கு இணையாக மனதைக் கவரும் உருக்கமான செய்தியையும் பதிவிட்டுள்ளார். கீர்த்தி சனோனின் இன்ஸ்பிரேஷனல் பதிவில், “நான் இப்படி செய்வேன் என்று நினைத்ததே இல்லை. கண்களில் கனவுகளுடன் இருக்கும் எல்லோரும்... நீங்கள் பயப்படும் அந்த முடிவை எடுங்கள். அது எளிதாக இருக்காது.
இதையும் படிங்க: நடித்தால் இவருடன் தான் நடிப்பேன்... தனது ஆசையை வெளிப்படுத்தி அடம்பிடிக்கும் நடிகை ரித்திகா..!

ஆனால், நீங்கள் உங்களுக்கான இறக்கைகளைக் கண்டுபிடிப்பீர்கள், பறக்க கற்றுக்கொள்வீர்கள்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, ரசிகர்கள் மற்றும் சினிமா துறையில் பலரை முன்னோக்கி செல்ல ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கிறது. கீர்த்தி தனது பயங்களை தாண்டி எடுக்கக் கூடிய துணிச்சலான மாற்றத்தை தத்துவத்தோடு பகிர்ந்திருப்பது அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த டாட்டூவுடன், கீர்த்தி சனோன் பச்சை குத்தும் பிரபல நடிகைகளின் பட்டியலில் இணைந்துவிட்டார். இதற்கு முன்பு பல்வேறு பாலிவுட் மற்றும் கொலிவுட் நடிகைகள் இத்தகைய டாட்டூ கலை மூலம் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக நடிகை திரிஷா – கழுத்தில் ஒரு லத்தீன் வாசகம், அதேபோல் ஸ்ருதி ஹாசன் – பல டாட்டூக்களுடன் தனக்கென ஓர் வித்யாசமான ஸ்டைல், அலியா பட், பிரியங்கா சோப்ரா, தபு போன்ற பலர் தனி அடையாளமாக பச்சை குத்தி இருக்கின்றனர். இப்போது கீர்த்தி சனோனும் அந்த பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். கீர்த்தி சனோன் தேர்வு செய்த பறவையின் டாட்டூ, வெறும் அழகுக்காக மட்டுமல்ல. அது ஒரு சுதந்திரத்தின், கனவுகளுக்காக பறக்கும் சக்தியின், தன்னம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்படுகிறது. கீர்த்தி சனோன் தற்போது பல படங்களில் பிஸியாக உள்ளார். அதில் “டூதி” என்ற பெயரில் ஒரு தன்னியக்க வீராங்கனையின் வாழ்க்கைச் சிறுகதை, தெலுங்கு மற்றும் ஹிந்தி பைலிங்குவல் திரில்லர் தனது தயாரிப்பு நிறுவனமான “Blue Butterfly Films” மூலம் ஒரு ஓடிடி தொடர் இவையெல்லாம் 2026-ல் வெளியாகும் திட்டத்தில் உள்ளன.

ஆகவே ஒரு பறவையை பச்சை குத்தியதன் மூலம், கீர்த்தி சனோன் தனது தன்னம்பிக்கை பயணத்தை தத்துவ ரீதியில் வெளிப்படுத்தியுள்ளார். இது வெறும் ஒரு டாட்டூ அல்ல.. அது ஒரு நடிகையின் வலிமை, வளர்ச்சி, மற்றும் கனவுகளின் குரல்.
இதையும் படிங்க: டீச்சரின் ரோல் மாடலே இவர்தானாம்.. இவர் மீதுள்ள ஈர்ப்பால் தான் சினிமாவே-வாம்..! நடிகை பிரிகிடா சாகா ஓபன் டாக்..!