பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடி அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் என்றாலே இந்திய சினிமாவின் ‘பவர் கபிள்’ என ரசிகர்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனாலும் கடந்த ஒரு வருடமாக, இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும், கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் பல மீடியாக்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தன. குடும்ப விழாக்களிலும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாகக் காட்சியளிக்காததுமே அத்தகைய ஊகங்களுக்குக் காரணமாக அமைந்தது.
சமீபத்தில், பச்சன் குடும்பம் கடந்த வாரம் ஒன்றாகக் கலந்து கொண்ட ஒரு தனியார் சந்திப்பு புகைப்படம் வைரலாகி, பல மாதங்களாக நிலவி வந்த பிரிவு வதந்திகளுக்கு ஓய்வு கிடைத்தது. இந்த நிலையில், தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களையும், சினிமாவை நோக்கி செலுத்தப்படும் கருத்துகளையும் அமைதியாக ஏற்றுக் கொள்வது பற்றிய ஒரு நெடுங்கால பார்வையை பகிர்ந்துள்ள அபிஷேக் பச்சன், சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளார்.

“நம்மை நோக்கி வரும் ஒவ்வொரு விமர்சனமும் தீங்கு செய்ய வரவில்லை; சில சமயம் அது வளர்ச்சியின் கதவைத்தான் திறக்கிறது” என்று ஆரம்பித்த அவர், கலைத்துறையின் நுணுக்கங்களைப் பற்றியும் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஸ்டார்-ஸ்பெஷல் பேட்டியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன், விமர்சனங்களை எடுக்கும் விதம் தான் ஒரு கலைஞரின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். பேட்டியில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் வைரலாகி வருகிறது..
இதையும் படிங்க: கல்யாணம் ஆகி ஒரு மாதம் கூட முழுசா முடியல.. அதுக்குள்ள இப்படியா..! விஜய் - ராஷ்மிகா பதிவால் ஷாக்கில் ரசிகர்கள்..!
அதில் “விமர்சனம் என்றாலே பலருக்கும் அது ஒரு எதிர்மறை சொல். ஆனால் அது நிஜமே அல்ல. ரசிகர்கள் தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து திரைப்படங்களை பார்க்கிறார்கள். அவர்களுக்கு நம்மைக் கெட்டதாக விமர்சிக்கவும், நல்லதாக பாராட்டவும் முழு உரிமை உண்டு. நாம் செய்கிற வேலை ஒரு பொது மேடையில் நடைபெறுகிறது. ஆகவே, நல்லதும் கெட்டதுமான கருத்துக்களை சமநிலையில் ஏற்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்றார்.
அதோடு அவர், கலைஞர்கள் விமர்சனங்களை ‘காயப்படுத்தும் ஆயுதமாக’ பார்க்காமல், ‘தன்னை திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக’ பார்க்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தினார். தனது ஆரம்பக்காலத்தில் தான் எதிர்கொண்ட கடுமையான விமர்சனங்களையும், அவற்றை சமாளித்த விதத்தையும் மிக திறம்பட பேசினார் அவர். அதில் “என்னால் செய்ய முடியாத ரோல்களும் இருந்தது. சில நேரங்களில் தோல்வி, சில நேரங்களில் கேலியும். ஆனால் அதெல்லாம் இன்று நான் நிற்கும் இடத்திற்கு வழிகாட்டிய பாடங்கள்தான்” என்றார்.

தன்னிடம் தொடர்ந்து வரும் கிண்டல்கள் மற்றும் மீம்களையும் குறித்துப் பேசும் போது, அவர் புன்னகையுடன், “அவை எல்லாம் எனக்குப் பாதிக்கவில்லை. கிண்டல் செய்பவர்களும் ரசிகர்களே. அவர்கள் இவ்வளவு கவனம் கொடுக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் பாராட்டாக நினைக்கிறேன்” என்றார்.
அமேலும் பிஷேக்–ஐஸ்வர்யா பிரிவு வதந்திகள் தொடர்பாக நேரடியாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எந்த திடுக்கிடும் பதிலும் அளிக்காமல் மிக அமைதியாகக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் “என் குடும்பம் பற்றிய விஷயங்களை நான் பொது மேடைகளில் பேசுவதில்லை. எங்களுக்கு இடையே உள்ள பந்தம் எப்படியானது என்பதை நாங்கள் அறிவோம். அதற்கு வெளிப்புற கருத்துகள் எந்த மாற்றமும் செய்ய முடியாது” என்றார்.
இத்தகைய தெளிவான பதிலால், ரசிகர்கள் “அவர்களுக்கிடையே பிரச்னை எதுவும் இல்லை” என நிம்மதிப்பட்டுள்ளனர். ஆகவே புதிய படங்கள் சிலவற்றில் நடித்து வரும் அவர், கதாபாத்திரத் தேர்வில் தற்போது மிகவும் கவனமாக இருக்கிறார். “நான் என்னை மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு கட்டத்தில் இருக்கிறேன். விமர்சனங்கள், பாராட்டுகள் எல்லாம் இரண்டும் எனக்கு இன்றியமையாதவை” என்று பேட்டி நிறைவில் தெரிவித்தார்.

மொத்தத்தில், பிரிவு வதந்திகளால் சூழப்பட்டிருந்த அபிஷேக் பச்சன், இந்த பேட்டியில் தனது நேர்மையான பார்வையாலும், தாராள மனதாலும், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மீண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். பலர், “இத்தகைய நிதானமான, நம்பிக்கையான பதில்தான் ஒரு உண்மையான கலைஞரின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது” என்று பாராட்டுகிறார்கள்.
இதையும் படிங்க: மீண்டும் உயிர்கொள்கிறது மூன்வாக்..! மைக்கேல் ஜாக்சனின் அதிரடி பயோபிக்.. ‘Michael’ புதிய பட போஸ்டர் வைரல்..!