குஷ்பூவிற்கு அடுத்து அழகான கொழு கொழு நடிகை யார் என யாரை பார்த்து கேட்டாலும் அவர்கள் கூறும் ஒரே பதில் பூனம் பஜ்வா, இணைய பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

அந்த ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு குஷி படுத்திவருபவர்.

காலையில் சூரியன் வருகிறதோ இல்லையோ பூனம் பஜ்வாவின் கிளாமர் புகைப்படம் வந்தே தீரும் என்று சொல்லும் அளவிற்கு தினமும் காலையிலேயே தனது போட்டோவை பகிர்ந்து விடுவார்.
இதையும் படிங்க: லண்டன் புறப்பட்டார் இளையராஜா.. Incredible India மாதிரி நான் Incredible Ilayara என பேட்டி..!

இப்படி பட்ட, பூனம் பஜ்வா மும்பையை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை அமர்ஜித் சிங் கடற்படை அதிகாரியாக பதவி வகித்தவர்.

நடிகை பூனம் பஜ்வா தனது கல்லூரி படிப்பை மும்பையில் உள்ள சிம்போசிஸ் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டியில் முடித்தார்.

பின், மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர், அதற்காக தனது கடுமையான முயற்சிகள் மேற்கொண்டார். அதன் விளைவாக ஒரு சில விளம்பர படத்தில் மாடலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, கொழு கொழு நடிகை என்று பெயர் பெற்றார்.

இதைத்தொடர்ந்து ஒரு சில படத்தில் பூனம் பஜ்வா நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன் முறையாக தமிழில், சேவல் என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே பல ரசிகர்களை கவர்ந்த பஜ்வா, அதன் பின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அழகும், திறமையும் இருந்த இவருக்கு சரியான படத்தை தேர்வு செய்ய தெரியாததால் இன்று பட வாய்ப்புகள் கிடைக்காமல் திரையுலகில் காணாமல் போனார் பூனம், ஆனால் தனது புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு மாடலாக இன்றும் வலம் வருகிறார்.
இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்.. சும்மா சும்மா வம்பிழுப்பதால் தொண்டர்கள் காட்டம்...!