பிளாக் ஷிப் என்ற யூடியூப் சேனல் மூலமாக உலகத்திற்கு அறிமுகமானவர் தான் விஜே சித்து. அந்த சேனலில் ஒளிபரப்பான "ஃபன் பண்றோம்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஷெரிப் அந்தச் சான்ஸை சித்துவுக்கு கொடுக்க, அதில் தனது முழு திறமையை காமித்த சித்துவின் நகைச்சுவை, பேசும் திறமை, பிராங்கிள் புதிய யுக்தி ஆகியவை மக்களுக்கு பிடித்த போக, 'ஃபன் பண்றோம்' நிகழ்ச்சி என்றால் அது 'வி.ஜே சித்து' தான் என்ற பெயர் மக்கள் மத்தியில் அடிபட தொடங்கியது. பல ஆயிரக்கணக்கான 'ஃபன் பண்றோம்' ஷோக்களை நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் சித்து.

இதனை அடுத்து பிளாக் ஷிப்பில் இருந்து வெளியே வந்த சித்து தனது நண்பர்களான ஹர்ஷத் கான் மற்றும் சூரியுடன் இணைந்து "விஜே சித்து விலாக்ஸ்" என்ற சேனலை ஓபன் செய்து ஹோம் டூர், சமையல், தனது நண்பன் வீட்டு நாய்களை பார்த்து கொள்வது, இரவில் நண்பர்களுடன் இணைந்து சாப்பிடுவது, என வீடியோக்கள் ஒவ்வொன்றாய் பதிவேற்றம் செய்ய இவர்களது யூடியூபில் சப்ஸ்கிரைப்ர்களும் பெருக ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: விஜே சித்து இயக்கும் புதிய படம்..! அனௌன்ஸ்மண்ட் வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்..!

எப்படி குக் வித் கோமாளியில் குக்குகளுக்கு கோமாளிகளை கொடுத்து ஷோவை ஃபேமஸ் ஆக்கினார்களோ அதே போல் விலாக்சில் காமெடியை புகுத்தி ஆண் நண்பர்கள் இணைந்தால் அந்த ட்ரிப் எப்படி இருக்கும் என்பதை காண்பிக்கும் அளவிற்கு இவர்களது வீடியோ இருப்பதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இப்படி யூடியூபில் வலம் வந்த சித்து, திடீரென வெள்ளித்திரையில் தோன்றுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் அஸ்வத்மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு நெருங்கிய நண்பனாக அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் சித்து. இந்தப் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவரை கொண்டாடிய ரசிகர்களும் பலராய் இருந்தனர்.

இப்படி இருக்க, இனி சித்து படங்களில் நடிப்பார் என பார்த்தால் படங்களை இயக்கி நடிக்க இருப்பதாக நேற்று வீடியோ ஒன்றின் மூலம் அறிமுகம் செய்தார். அதில், வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேசன் தயாரிப்பில் விஜே சித்து எழுதி இயக்கி நடிக்க உள்ள திரைப்படம் "டயங்கரம்". இந்தப் படத்திற்கு உண்டான அட்டகாசமான அனவுன்ஸ்மென்ட் வீடியோவை தனது youtube சேனலில் பதிவேற்றம் செய்தார். இந்த நிலையில், இப்படத்திற்கான அதிகார பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இதையும் படிங்க: வந்தாச்சு.. வந்தாச்சு.. 'கேங்கர்ஸ்' பட "ஸ்னீக் பிக் காட்சி" இணையத்தில் வந்தாச்சு..!