இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியின் எழுத்தில் உருவாகி இருக்கும் பாசம் கலந்த திரைப்படம் தான் இந்த 'மாமன்' திரைப்படம். இந்தப் படம் தற்பொழுது வெளியாகி அனைத்து திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இப்படி இருக்க, இப்படம் எதைக் குறிக்கிறது என்று பார்த்தால் தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவைக் குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படத்தை எழுதியிருக்கிறார் நடிகர் சூரி.
இதையும் படிங்க: உதயநிதிக்கு சந்தானம்.. விஜய்க்கு ஆதரவாக நடிகர் சூரி தேர்தல் பிரச்சாரம்..?

சூரியின் எழுத்தில் வெளியாகியுள்ள இந்த 'மாமன்' படத்தை பார்த்து தியேட்டரில் அனைவரும் கண்கலங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை உள்ளது. அப்படி என்ன தான் கதை என பார்த்தால், இன்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் சூரிக்கு ஒரு அழகான அக்கா இருக்கிறார் அவரது பெயர் கிரிஜா. இந்த கிரிஜாவிற்கும் ரவிக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து உள்ளது.

இப்படி இருக்க, ஒரு நாள் உறவினர் ஒருவரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார் கிரிஜா, அங்கு அவரைப் பார்த்த அவருடைய மாமியார், உனக்கு இன்னும் குழந்தை பாக்கியமே இல்லை நீ எதற்கு இங்கு வந்தாய் என்று கூறி அவரை கரித்துக் கொட்ட, அவர் மீது திடீரென வாந்தி எடுத்து விடுகிறார் கிரிஜா. வாந்தி எடுத்த மருமகளை கோபமாக பார்த்த மாமியார், அவள் மாசமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் அந்த கோபம் தணிந்து அவரை அன்புடன் அரவணைக்கும் காட்சிகள் நன்றாகவே இருந்தது.

10 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் பெற்ற தனது அக்காவை நலமுடன் பார்த்துக் கொள்ளும் தம்பி இன்பா, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, வயிற்றில் வளரும் குழந்தையிடம் 'என்னை பெற்றாரே' என சொல்லி அழுவார்.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி தான் மருத்துவர் அவர் கவனிப்பில் தான் இன்பாவின் அக்காவிற்கு குழந்தை பிறக்கிறது. அங்கு சூரி தனது அக்காவின் மீது வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு இம்பிரஸ் ஆகும் ஐஸ்வர்யா, அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வார்.

இதுவரை மாமனுடன் மட்டுமே இருந்த அக்காவின் மகன், நான் சூரி உடன் தான் இருப்பேன் என அடம் பிடிப்பதும் அவருடன்தான் தூங்குவேன் என அடம் பிடிப்பது எல்லாம் பெரிய பிரச்சனையாக மாறி சூரியினுடைய வாழ்க்கைக்கு பாதகமாக முடிகிறது.

இதனால் அக்கா தம்பி உறவுக்குள் மிகப்பெரிய விரிசல் வர, கடைசியில் அக்கா தம்பி இருவரும் சேருவார்களா? மாட்டார்களா? என்பதை கதையின் க்ளைமாக்ஸ் ஆக வைத்துள்ளனர்.

இப்படி பட்ட அருமையான படத்தை சூரி எப்படி யோசித்தார் உண்மையில் படம் நன்றாக உள்ளது என படம் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் தியேட்டரில் இருந்து வெளியே செல்பவர்களும் அழுதபடி செல்வத்தையும் பார்க்கும் வகையில் அக்கா தங்கை பாசத்தை அள்ளித்தெளித்து இருக்கிறார் இயக்குனர்.

மேலும், இப்படம் நல்லபடியாக ஓடவேண்டும் என்பதற்காக, சூரியின் ரசிகர்கள் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு அவரிடம் திட்டும் வாங்கினர். சூரியின் கடிந்துகொள்ளுதலுக்கு கவிஞர் வைரமுத்துவும் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் மாமன் படம் பார்த்த சிறுமியும் படம்பார்த்து தனது தாய் மாமனை நினைத்து அழ, அந்த குழந்தையை சமாதானம் செய்ய நடிகர் சூரி, வீடியோ கால் வாயிலாக வந்து சமாதானம் செய்தார். இப்படி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது இந்த மாமன் படம்.

இந்த நிலையில், நடிகை ஸ்வாசிகா படப்பிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட சுவாரசிய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சிறுமியை அழ வைத்த நடிகர் சூரி.. செய்வதறியாது நின்ற ரசிகர்கள்..!