என்னப்பா இது, ஒவ்வொரு நடிகரின் திரைப்படமும் வெளியாகும் வேளையில் ரசிகர்கள் பேனர் வைக்கிறார்கள், பாலபிஷேகம் பண்ணுகிறார்கள், கோவிலில் அர்ச்சனை செய்கிறார்கள், அங்கப் பிரதட்சணையும் பண்ணுகிறார்கள். இப்படி இருக்க தனது கதாநாயகனுக்காக ரசிகர்கள் எவ்வளவோ காரியங்களை துணிச்சலாக செய்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது கதாநாயகனாக உருவெடுத்த சூரிக்கு அவரது ரசிகர்கள் செய்த செயல் வருத்தம் அளித்திருக்கிறது போல, அதனாலேயே அவரிடம் திட்டு வாங்கியிருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

அப்படி என்னதான் நடந்தது, என பார்த்தால் முதன் முதலாக நடிகர் சூரியின் எழுத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ள திரைப்படம் தான் மாமன் திரைப்படம். இத்திரைப்படம் வெளியான ஒரே நாளில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்தப் படத்தை குறித்து பார்த்தால் தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும் அக்கா தம்பியின் உறவை குறித்தும் கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கைகளை குறித்தும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே உள்ளது என மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் சூரியுடன் நடக்க இதுதான் காரணம்..! மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா..!

நன்றாக இருக்கும் அக்கா தம்பியின் உறவுகளுக்குள் விரிசல் விட காரணமாய் அக்காவின் மகனே இருப்பதால் தனது தம்பியின் வாழ்க்கையை காப்பாற்றுவதர்காக தனது மகனையும் தம்பியையும் பிரிக்க அக்கா செய்யும் திட்டம் ட்யூஸ்ட்களிலேயே அல்டிமேட் ஆக இருந்தது. ஆனாலும் படத்தைக் குறித்து பார்க்கும் பொழுது பாசங்கள் சற்று அதிகமாகவே இருக்கிறது என்றும் சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது படத்தில் காமெடி என்பது துளி கூட இல்லை. சண்டைக் காட்சிகள் எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை என ஒரு சில குறைகளை மக்கள் வைத்து தான் சென்றனர். சிலர் இது ரஜினியின் அண்ணாத்த திரைப்படமா? அல்லது சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படமாய் என தெரியவில்லை என்று கூறி சென்றனர்.

இந்த சூழலில், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நடிகர் சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் நடத்தி இருந்தனர் அவரது ரசிகர்கள் சிலர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவரது ரசிகர் ஒருவர், மாமன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாட வேண்டும். முதன்முதலாக எங்கள் அண்ணன் சூரி எழுதி நடித்து இருக்கும் இந்த படம் அவரது வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருக்க வேண்டும்.

இதனை எல்லாம் மனதில் வைத்து தான் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனிடம் வந்து வேண்டி இருக்கிறோம். படம் வெற்றி அடைவதற்காகவே மண் சோறு சாப்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறோம். படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் குடும்பத்துடன் சென்று அனைவரும் பாருங்கள். முருகன் துணை அண்ணனுக்கு இருக்கும் வரை அவருக்கு தோல்வியே இல்லை என்று அவரது ரசிகர் மகிழ்ச்சியுடன் பேசி சென்றார்கள்.

இதனை குறித்து நடிகர் சூரியிடம் செய்தியாளர்கள் கேட்க, திடீரென கோபத்தில் கொந்தளித்த அவர், "மாமன் படம் வெற்றியடைய மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை உண்மையில் என் தம்பிகள் என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது எனக்கு. எதற்க்காக இப்படி செய்கிறீர்கள், கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக இந்த படம் ஓடும். நீங்கள் செலவு செய்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் மகிழ்ந்து இருப்பேன் அவர்களும் என் தம்பிகளாக இருக்க தகுதியடையவர்களாக இருப்பார்கள்.

இப்படியான விஷயங்களை இனிவரும் காலத்தில் யாரும் செய்யவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என வேதனையுடன் கூறி சென்றார்.
இதையும் படிங்க: அய்யா அய்யா முருகய்யா.. மாமன் படத்தை பாரய்யா..! மண்சோறு சாப்பிட்ட சூரியின் ரசிகர்கள்..!