தமிழ் சினிமாவின் மிகவும் பரபரப்பான கூட்டணியாக பேசப்பட்டு வந்த சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இப்படியாக அதிகரித்த மாஸ் இமேஜுடன் புதிய கேரக்டரில் சிம்பு நடித்தாலும், சமூக நல அடிப்படையிலான கதைகளுக்கு பிரபலமான வெற்றிமாறனின் படம் என்பதால், இதில் உணர்ச்சி, சமூக அக்கறை, நகர்ப்புறக் கதையமைப்பு என எல்லாம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தப் படம், வடசென்னை சூழலில் உருவாகும் ஒரு கேங்ஸ்டர் டிராமா என்றும், இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. குறிப்பாக வெற்றிமாறனின் ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விசாரணை’ போன்ற படங்களைப் போலவே, இது ஒரு மதிப்புமிக்க சமூகத் திரைக்கதையாக பார்க்கப்பட்டது. இப்படி இருக்க படப்பிடிப்புக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றிய தெளிவான தகவல் கிடைக்கவில்லை. இதனால், இந்த படம் கைவிடப்பட்டதா? என்ற கேள்வி சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் படக்குழுவின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, படத்தின் தயாரிப்பாளர் தரப்பில், சம்பள விவகாரம் தொடர்பாக சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிம்பு தரப்பில் இப்படத்துடன் தொடர்புடைய நெருக்கமான நபர்கள், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அந்த குழப்பங்களை தீர்ப்பதற்காக முயற்சி செய்து வருகிறார்களாம்.
இதையும் படிங்க: 'கூலி' பட ப்ரமோஷன் விழாவால் தள்ளிப்போன 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்..!
இந்த தாமதம் காரணமாகவே, படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தயாரிப்பு தடை குறித்து நிலவும் செய்திகளுக்கு மத்தியில், சில நெருக்கமான வட்டாரங்கள், " சிம்பு இந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அவர் இந்த கூட்டணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தயாரிப்பாளர் தரப்பை சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறார். எந்த சிக்கலும் படத்தை நிறுத்த முடியாது" எனத் தெரிவிக்கின்றனர். மேலும் சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணிக்கு எதிர்பார்ப்பு இருப்பது மட்டும் இல்லாமல், இது சிம்புவின் திரைக்கதைத் தேர்வு வளர்ச்சியையும், வெற்றிமாறன் இயக்கத்தில் அவரது அட்டகாசமான முயற்சியில் உருவாகும் இந்த கதை மீண்டும் ஒரு தடம் பதிக்க தயாராக இருப்பதையும் காட்டுகிறது.

ஆகவே சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் கேங்ஸ்டர் படம்... தாமதமானாலும், கண்டிப்பாக அதிரடியாக வெளியாகும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.50 கோடியை கடந்த விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’..! இன்று எங்கு வெளியாகிறது தெரியுமா..?