மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் புதிய கருத்தடை முறை தொடங்கப்பட்டு உள்ளது.பெண்ணின் கைக்கு கீழ் எளிய முறையில் பொருத்தி 3 ஆண்டுகளுக்கு கருத்தடை பயன் அடையலாம் என அரசு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மற்றும் மகப்பேறியல் துறை சார்பில் இன்று முதல் புதிய கருத்தடை முறையாக தோலுக்கு அடியில் பொருத்தப்படும் 'இம்பிளானன் என்.எக்ஸ்டி' (Implanon NXT) எனும் புதிய கருத்தடை சாதனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பெண்களின் கையின் மேல் பகுதியில் தோலுக்கு அடியில் பொருத்தப்படும் ஒரு சிறிய குச்சி போன்ற சாதனமாகும். இது நீண்ட காலத்திற்குப் பலன் தரக்கூடியது மற்றும் தேவையெனில் எளிதாக மாற்றிக்கொள்ளக்கூடியது என அரசு மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த கருத்தடை உள்வைப்பு முறை பாதுகாப்பானது எனவும், இந்த சாதனத்தை பொருத்துவதும், அகற்றுவதும் மிகவும் எளிமையானது.
காப்பர் டி போன்ற முறைகளில் குழந்தை பிறப்பு உள்ளிட்டவை தவறி நிகழும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு இச்சாதனத்தால் கருத்தடை பயன் கிடைக்கும் எனவும், இச்சாதனம் கருத்தடைக்கான ஹார்மோன்களை சுரந்து கருத்தடைக்கு வழிவகுக்கும் எனவும் அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “வளங்களை வாரிச்சுருட்டும் பட்ஜெட்... திமுகவின் குடும்ப பட்ஜெட்...” - தவெக நிர்மல் குமார் காட்டம்...!
சென்னை, சேலம் மருத்துவமனைகள் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இதனை தொடர்ந்து மதுரை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தபட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
இதையும் படிங்க: வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு ...! 17 ஆண்டுக்கு பிறகு பிஎன்பி ஆட்சி!