தமிழ் சினிமாவில் பல திறமைகள் கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. காரணம் இவர் நடிகர் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், எடிட்டர் என பல திறமைகளை சினிமாவில் வெளிப்படுத்தி வருபவர். அவரது படங்களில் அவரது தனி சிறப்பான கதாபாத்திரம் அவரை, ரசிகர்களிடையே மதிப்பையும் மாபெரும் புகழையும் பெற்று கொடுத்துள்ளது. மேலும், விஜய் ஆண்டனி நடித்த சமீபத்திய திரைப்படமான "மார்கன்" சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், விஜய் ஆண்டனியின் சுவாரஸ்யமான கதைத்தேர்வு குறித்து திரையுலகில் ஆச்சர்யமாக பேசப்பட்டது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறையின் விசாரணையில் ஆஜராகாத நடிகர் ராணா டகுபதி..! அதிரடியாக சம்மன் அனுப்பிய அதிகாரிகள்..!
இப்படம் ஒரு அதிரடி மற்றும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமாக இருந்தது. இந்தப்படத்துக்கு பின்னர், விஜய் ஆண்டனி தனது 25-வது திரைப்படமாக உருவாகியுள்ள "சக்தித் திருமகன்" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதுடன், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் செயல்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவருடைய திரைப்பயணத்தில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தை இயக்கியுள்ளவர் அருண் பிரபு பூர்ணச்சந்திரன். இவர் “ஆரம்கோலம்” போன்ற தரமான படங்களை இயக்கி கவனம் பெற்றவர். அவரின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் இதில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை ஒரு அரசியல் பின்னணியை கொண்டதாகவும், சமூக பார்வையை வெளிப்படுத்தும் ஆழமான கருத்துகளோடு பயணிப்பதாகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தித் திருமகன் திரைப்படத்தில் கதாநாயகியாக திருப்தி நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் அவர் ஜோடியாக நடித்திருப்பது அவரது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனைப்பாக பார்க்கப்படுகிறது.

இதுவரை அவர் நடித்த படங்களைவிட இது அவருக்கு ஒரு புதிய உச்சத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘பராஷக்தி’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இது விஜய் ஆண்டனியின் படங்களுக்கு எப்போதும் இருக்கும் அனைத்து மொழி ரசிகர்களின் ஆதரவை மேலும் விரிவுபடுத்தும் என நம்பப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை இன்று விஜய் ஆண்டனி வெளியிடுகிறார். அவரே இசையமைத்திருக்கும் இந்த படத்தில் முதல் பாடல் ‘மாறுதோ’ என்ற பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த பாடல் ஒரு உணர்ச்சி மிக்க நம்பிக்கையூட்டும் பாட்டாக உருவாகியுள்ளதாக இசைத்துறையில் விமர்சனங்கள் தெரிவிக்கபட்டத்தை போல் தற்பொழுது "மாறுதோ" பாடல் வெளியாகியுள்ளது.
Maarudho - Lyric Video song கிளிக் செய்து பார்க்கலாம்..
அதேபோல், இரண்டாவது பாடலான ‘ஜில் ஜில் ஜில்’ இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படவிருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சியான, புத்துணர்வு ஏற்படுத்தும் பாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு பாடல்களும் சமூக வலைதளங்களில் முன்னதாகவே பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 'சக்தித் திருமகன்' படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இது விஜய் ஆண்டனியின் 25வது படம் என்பதால், அவரது ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். விஜய் ஆண்டனியின் கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக இந்த படம் அமையும் என திரையுலகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் படத்தின் தலைப்பு, போஸ்டர் மற்றும் குறுந்திரை காட்சிகள் இதுவரை அதிகப்படியாக வெளியாகியுள்ளன.
அவற்றின் அடிப்படையில், இது சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய தேவை, அரசியலுக்குள் இருக்கும் சிக்கல்கள், பொதுமக்களின் போராட்டங்கள் போன்ற முக்கியமான கருப்பொருள்களை பேசும் திரைப்படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் உள்ள உணர்வும், தன்னம்பிக்கையும், சமூக அக்கறையும் இதில் மேலும் வலுப்பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில், இன்று வெளியாகும் இரு பாடல்கள், படத்தின் மேலான தரத்தையும், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் போது, விஜய் ஆண்டனி தனது 25வது படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் புதிய இடத்தை பிடிப்பார் என்பதை மாற்று கருத்து இல்லை.
இதையும் படிங்க: மாஸ் ஹீரோயின் ஆக ஆசை… ஆனால் அதற்காக ஆபாசமாக நடிக்கமாட்டேன்..! நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்..!