×
 

பிரபல தமிழ் நடிகர் ராஜேஷ் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

நடிகரும், டப்பிங் கலைஞருமான ராஜேஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் சுமார் 50-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பல முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார் நடிகர் ராஜேஷ்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி ராஜேஷ் பிறந்தார். 1974இல் ''அவள் ஒரு தொடர் கதை'' படத்தில் நடிக்க நடிகர் ராஜேஷுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்தார். இதனையடுத்து  'கன்னிப் பருவத்திலே' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு மக்கள் என் பக்கம், தண்ணீர் தண்ணீர் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். மேலும் கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் ராஜேஷ் நியமிக்கப்பட்டார். 

இதையும் படிங்க: யாரு.. ரேவதியா..? புகழ் மூதாட்டி பெருமாயி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

இந்த நிலையில், 50 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வந்த நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று மே 29ம் தேதி காலமானார். அவருக்கு வயது 76. மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: கர்நாடகத்தில் எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்க முடியாது.. கமல்ஹாசன் நெத்தியடி ரியாக்‌ஷன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share