தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா.

வெற்றிகரமாக 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார்.

அதே போல் தமிழில் டாப் ஹீரோக்களாக இருக்கும், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகை திரிஷாவின் 42வது பர்த்டே.. இப்படி ஒரு கொண்டாட்டமா..! வாய்பிளக்கும் நெட்டிசன்கள்..!
40 வயதை த்ரிஷா எட்டிய பிறகும் கூட இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முட்டி மோதி வருகிறார்கள்.

குறிப்பாக இந்த ஆண்டு, த்ரிஷாவின் காட்டில் பண மழை கொட்டி வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக இவர் நடித்த, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆனது.

இதை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தில், த்ரிஷாவின் கதாபாத்திரம் சர்பிரைஸாக இருக்கும் என கூறப்படுகிறது.

படத்தின் ரிலீஸ் தேதி துவங்குவதால், புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்... இந்த படத்தில் இருந்து சுகர் பேபி பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

த்ரிஷா வெள்ளை நிற புடவையில் தோன்றி ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

இந்த பாடலின் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Kushboo Photos: ஸ்டைலிஷ் லுக்கில்... செல்ஃபி புள்ளையாக மாறிய குஷ்பு!