• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    40 சீட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆக வரவில்லை... ஆட்சியை பிடிக்க வந்துள்ளோம்... ஆதவ் அர்ஜுன் விலாசல்

    தவெக ஆரம்பித்து இரண்டாம் ஆண்டு விழா இன்று நடந்து வருகிறது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுன் 1967-ல் 1977-ல் கொண்டு வந்த மாற்றம் மீண்டும் வரும் என ஆதவ் அர்ஜுன் பேசினார்.
    Author By Kathir Wed, 26 Feb 2025 13:53:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    We did not come to become MLAs by buying 40 tickets... We have come to seize power...Adhav Arjun

    விழாவில் ஆதவ் அர்ஜுன் பேசியதாவது...

    ”எப்பொழுதும் தமிழ்நாட்டின் முகம் நம்முடைய தலைவர் அவர்களுக்கு என்னுடைய வணக்கம்,, தமிழக வெற்றி கழகத்தில் என்னுடைய முதல் உரை. தந்தை பெரியார்... புரட்சியாளர் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர், சமூக சீர்திருத்தவாதி அஞ்சலை அம்மாள் அவர்கள், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுடைய கொள்கைகளுக்கும் தியாகங்களுக்கும் என்னுடைய முதற்கண் வணக்கம்.

    ஒரு தலைவர் உருவாகக்கூடாது, மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் சூழ்ந்த பொழுது ஒரு அழைப்பு வந்தது தலைவர் அவர்களிடமிருந்து, உங்களுடைய இடம் உங்களுடைய கொள்கை தமிழக வெற்றி கழகத்தில் இருந்து துவங்குகிறது என்று. நான் ஏன் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்தேன் என்ற பதிவை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். சிறுவயதில் அம்பேத்கரிடமும் பெரியாரிடம் இணைக்கப்பட்டவன் நான். அந்த கொள்கை வழியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளது. என்னுடைய ஒரே கேள்வி தந்தை பெரியார் அவர்களின் சமூக அரசியல், அதை பேசக்கூடிய இந்த அரசியல் கட்சிகள், 70 வருட காலமாக எப்பொழுதும் புரட்சியாளர் அம்பேத்கரை மேடையில் ஏற்றியது கிடையாது.

    இதையும் படிங்க: 'பாலிசி ஃபெயிலியர்… கபடதாரிகள்…'- திமுக ஆட்சியைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா..!

    2nd Anniversary

    இரு பெரும் தலைவர்கள், ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் எந்த ஆளுமையை, தமிழகத்தில்  தன்னிகரில்லா தியாகத்தை செய்தவர்களை ஐம்பெரும் தலைவர்களாக, கொள்கை தலைவர்களாக, நியமித்து தன்னுடைய சினிமா என்கின்ற உச்சபட்ச ஒரு பொருளீட்ட கூடிய ஒரு தொழிலை விடுத்து தொடர்ந்து இந்த கொள்கை வழியில் நடக்க வேண்டும் ஒரு புதிய அரசியல் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு வரும் அவரோடு சேர்ந்து உரையாடிய பொழுது எந்த அளவிற்கு கொள்கை ரீதியில் தன்னை உள்வாங்கி இருக்கிறார் என்பது தெரிந்தது. அந்த புரிதலோடு என்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டேன்.

    2nd Anniversary

    தலைவர் கூறியதை போல பெரியாரிசம் பேசுவார்கள், சமூக சீர்திருத்தம் பேசுவார்கள், ஆனால் ஜாதி அரசியல் பேசி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று, ஊழலை முதற்கண்ணாக, ஆட்சியின் முக்கிய ஒரு கொள்கையாக உருவாக்கி, போலி கபட வேடதாரிகள் பெரியாரையும்  சமூக சீர்திருத்தத்தையும் முன்னிலைப்படுத்தியே இன்றைய அரசியல் ஒரு போலி கபடதாரிகளின் கைகளில், ஒரு ஊழல்வாதிகளின் கைகளில் அது இருந்து கொண்டிருக்கிறது. அதை துடைத்து எறிய வேண்டும். உண்மையான தலைவர் கூறியதைப் போல உண்மையான, உணர்வற்ற  தலைவர்கள் தான் பார்த்த பல்வேறு தலைவர்கள்.  அந்த உணர்வு தமிழக வெற்றி கழகத்தில் இருக்கின்றது.  ஒரே கட்சி பெரியாரின் அம்பேத்கரையும் இணைத்து சமூக சீர்திருத்தத்தை உருவாக்கக்கூடிய ஒரு இயக்கமாக பரிணமித்துக் கொண்டிருக்கிறது  தவெக. 

    சரியாக 1925 களில் திராவிட இயக்க சித்தாங்கள் நீதி கட்சி மூலம் உருவாக்கப்பட்டு எல்லோரும் சமம் என்கிற சித்தாந்தம் நீதி கட்சி ஆட்சி முறை உருவாக்கப்பட்டு தந்தை பெரியார் மூலம்  அந்த கொள்கைகளை திராவிட கழகம் மூலம் சேர்ந்து அண்ணா உருவாக்கிய எல்லோரும் சமம் என்கிற அரசியல் 1949 உருவாக்கப்பட்டு 100 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் பெரியார் அவர்கள் கண்ட கனவு, அண்ணா கண்ட கனவு, புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 

    2nd Anniversary

    வெற்றி பெற்று ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்து, 30 வருடங்களுக்கு முன்பு எந்த பொருளாதார வலிமையும் இல்லாத இல்லாதவர்கள் இன்று மிகப்பெரிய கல்வி நிறுவனங்களை நடத்திக்கொண்டு, சினிமா துறையில் பல்வேறு தொழில்களை நடத்திக் கொண்டு இருக்கின்ற ஒரு அரசாங்கமாக, அரசியல் நோக்கிய ஒரு அரசியல் என்று இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரே மாற்று தமிழக வெற்றி கழகம். அதற்கு ஒரே சிந்தனையில் உள்ள தலைவர் நம்முடைய தலைவர் விஜய் அவர்கள்.

    எல்லோரும் பொதுவா கொள்கை ரீதியாக இருக்கக்கூடியவர்கள். தொலைக்காட்சி வாதங்களில் பேசிக்கொண்டிருப்பார்கள் நடிகர் அவருக்கு அரசியல் தெரியுமா என்கிற விமர்சனம் இன்றைக்கு வரைக்கும் வைத்துக் கொண்டிருப்பார்கள். 75 வருட காலமாக கொள்கை பேசிய தலைவர்கள் இதுவரையிலும் எந்த மாற்றத்தையாவது உருவாக்கி இருக்கிறார்களா? 2021 இல் திமுக பிரச்சாரம் செய்தபோது தமிழகத்தை கடனில் வீழ்ந்த மாநிலம், அதிமுக 15 ஆண்டுகளாக 5 லட்சம் கோடி கடனாளியாக்கி விட்டது என்றார்கள். நாலு வருடத்தில் 4 லட்சம் கோடி கடன் வாங்கி இன்றைக்கு 9 லட்சம் கோடி ஆக கடன் இருக்கிறது. 

    2nd Anniversary

    கொள்கைகளை பேசி, மேடைகளில் பேசி, மக்களிடம் கவர்ச்சியை ஏற்படுத்தி, அந்த கவர்ச்சியின் மூலம் ஆட்சியை ஏற்படுத்தி, அந்த ஆட்சி மூலம் ஊழலை மட்டுமே செய்து கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கம் தான் இன்று ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில் ஊழல் எப்படி இருக்கும் என்றால் வளர்ச்சி, ஊழல். பொருளாதாரத்தை உருவாக்குக்வார்கள் அதில் ஊழல் இருக்கும் இங்கு கடனை உருவாக்கி அதில் ஊழலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியை உருவாக்கி ஊழல் செய்தால் கூட ஒரு பெரும் புரட்சியை மேலை நாடுகளில் பார்க்கலாம். இங்கு கடனை உருவாக்கி ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய தலைகளில் எல்லாம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் கடன்தான் இருக்கிறது. கேட்டால் பொருளாதாரம் வளர்ந்து விட்டது, 10 லட்சம் கோடி கொண்டு வந்து விட்டோம் என்கிறார்கள்.

    சிறைகளை பார்த்து பயப்படுபவர்கள் அல்ல நாங்கள். சிறைக்கும் செல்வோ, ஜார்ஜ் கோட்டைக்கும் செல்வோம்.  கடந்த 62 வாரங்களாக நாம் தான் எதிர்க்கட்சி, நம் தலைவர் தான் எதிர்க்கட்சித் தலைவர். நீங்கள் எதையும் செய்யுங்கள், எத்தனை போலீசை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள், உங்களுடைய கூட்டணி அரித் மேடிக் எல்லாம் எங்களுக்கு தெரியும். 2011 இதே தான் யோசித்து தேர்தல் திமுக 30% காங்கிரஸ் 10% அதோட சேர்ந்து பமக 8% எல்லாம் சேர்த்து 55% வரும் என்று சொன்னார்கள் . ஆனால் ஜெயலலிதா ஜெயித்தார்கள் எதிர்க்கட்சித் தலைவராக கூட ஆக முடியவில்லை. அதனால் தமிழக மக்களுக்கு தெரியும். ஆட்சியின் பிரச்சனை என்ன. 36 பர்சன்டேஜ் இபி விலை ஏற்றி இன்றைக்கு எந்த இண்டஸ்ட்ரியும் நடத்த முடியவில்லை.

    2nd Anniversary

    நீங்கள் கொடுக்கும் ஆயிரம் போதுமா ஆயிரம் ரூபாய் கொடுத்து பத்தாயிரம் ரூபாய் புடுங்கி கொண்டிருக்கிறீர்கள் மக்களிடம். இதையெல்லாம் எங்கள் தலைவர் எதிர்க்கட்சித்தலைவராக இருந்து கேட்பார்.  அவருடைய பயணம் ஒவ்வொரு நொடியும் வெற்றி பயணம். தமிழகத்தின், அதிர்வுகளை 1967 இல் அண்ணா ஏற்படுத்தியது போல், 1977 எம்ஜிஆர் காலக்கட்டத்தில் ஏற்படுத்தியது போல அடுத்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார். அதற்கெல்லாம் அஜெண்டா இல்லாமல் இல்லை,  பிளானிங் இல்லாமல் இல்லை.  தேர்தல் அரசியல் இவர்களுக்கு தான் எல்லாம் தெரியுமா?

    ஒரு பெரிய மந்திரி பூத்துக்கு பத்தாயிரம் கோயம்புத்தூர் பக்கம் எல்லாம் பாத்துக்குவார். ஒருத்தர் திருவண்ணாமலை பக்கம் பார்த்துக்குவார். இன்ஜினியரிங் காலேஜ் வச்சிருக்காங்க 1967 இல் அண்ணா 1977 இல் எம்ஜிஆர் வந்தபோது பணபலத்தை நோக்கி அல்ல மக்கள் செல்வாக்கை நோக்கி. எங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் உழைப்பு இருக்கிறது தைரியம் இருக்கிறது, நம் தலைவர் இருக்கிறார் அதோடு சேர்ந்து உண்மைக் கொள்கை இருக்கிறது. 

    2nd Anniversary

    அதனால் அஜெண்டா ரெடி. அடுத்த ஒரு விஷயம் பிரசாந்த் ஏன் வந்தார் என்று கேட்கின்றனர். 2021-ல் ஏன் இதை கேட்கவில்லை. நாங்க 40 சீட்டு வாங்கிட்டு எம்.எல்.ஏ ஆக வரவில்லை, ஆட்சி அமைக்க வந்திருக்கிறோம் ஆட்சி அமைப்பதற்கு எல்லா சிந்தனை கொண்டவர்களும் இந்த கட்சியில் வரும் பொழுது, இது மன்னர் ஆட்சி அல்ல அறிவு இருக்கிறவர்கள் எல்லாம் கட்சிக்குள் வரக்கூடாது, துதி பாடிகள். வாழ்க வாழ்க வாழ்க, மக்கள் ஒழிக ஒழிக ஒழிக. இதுதான் இவர்கள் கொள்கை, ஆகவே நம்முடன் இணைந்து பிரசந்த் கிஷோர் செயல்பட போகிறார். 

    இன்னும் பலர் வர உள்ளனர், தலைவர்கள், ஆளுமைகள் வரக்கூடாது என்பது நிச்சயமல்ல ஏனென்றால் இங்கே எல்லோரும் உறுதியாக இருக்க வேண்டும் அந்த உறுதியுடன் நம்முடைய பயணத்தை உருவாக்குவோம் நம்பிக்கையுடன் தைரியத்துடன் நம்முடைய பயணத்தை உருவாக்குவோம் வாய்ப்பு கொடுத்த தலைவரெல்லாம் பொதுச் செயலாளர்களுக்கும் மேடையில் இருக்கின்ற உழைப்பாளர்கள் போல் என்னுடைய நன்றி வெற்றி நிச்சயம்” இவ்வாறு அவர் பேசினார்.
     

    இதையும் படிங்க: 2026- தேர்தலுக்கு முன் 'யானை' பலம்.. விஜய் வகுக்கும் திட்டம்: களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜூனா..!

    மேலும் படிங்க
    திரும்பிய பக்கமெல்லாம் அடி.. பாக். ராணுவம் மீது பலூச் விடுதலைப் படையும் தாக்குதல்!!

    திரும்பிய பக்கமெல்லாம் அடி.. பாக். ராணுவம் மீது பலூச் விடுதலைப் படையும் தாக்குதல்!!

    இந்தியா
    பாகிஸ்தானுக்கு இந்தியா மரண அடி.. விடிய விடிய பாகிஸ்தான் நகரங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.!

    பாகிஸ்தானுக்கு இந்தியா மரண அடி.. விடிய விடிய பாகிஸ்தான் நகரங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.!

    இந்தியா
    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா

    செய்திகள்

    திரும்பிய பக்கமெல்லாம் அடி.. பாக். ராணுவம் மீது பலூச் விடுதலைப் படையும் தாக்குதல்!!

    திரும்பிய பக்கமெல்லாம் அடி.. பாக். ராணுவம் மீது பலூச் விடுதலைப் படையும் தாக்குதல்!!

    இந்தியா
    பாகிஸ்தானுக்கு இந்தியா மரண அடி.. விடிய விடிய பாகிஸ்தான் நகரங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.!

    பாகிஸ்தானுக்கு இந்தியா மரண அடி.. விடிய விடிய பாகிஸ்தான் நகரங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.!

    இந்தியா
    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share